எதுக்காக ஐய்யப்ஸ் வர்றாரோன்னு நினைச்சுக்கிட்டே 'சிங்கலா ஸ்டோர்ஸ்' போனால் செட் முண்டு ஒன்னு கண்ணில் பட்டுச்சு. 'வேணாமுன்னு நான் நினைக்க , வேணுமுன்னு கோபால் நினைக்க...........' போனால் போகட்டும். ஜெயம் கோபாலுக்குன்னு விட்டுக்கொடுத்தேன்:-) இன்னிக்குக் கோவிலுக்குக் கட்டிக்கிட்டு வந்துருக்கலாமோ?
வரப்போகும் கோபுரம்நாம் போனபோது வழக்கம்போல் கோவிலில் யாருமில்லை. கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் திருப்பணி நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னேனா? என்ன.... இல்லையா? அடடா........சரி. இப்பச் சொல்லிடறேன். நம்ம சண்டிகர் முருகனுக்கு அஞ்சு நிலைக் கோபுரம் ஒன்னும் கட்டும் வேலை இப்போ நடக்குது. பூமி பூஜை செஞ்சு அடிக்கல் நாட்டி வேலை ஆரம்பிச்சாச்சு.
சாஸ்திரத்துக்கு அடிக்கல் நாட்டி கங்கை தெளித்து பூஜை முடிச்சு, கோவிலின் உள்ளே வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகனுக்கு ருத்ராபிஷேகம், அலங்காரம், ஆரத்தி எல்லாம் நடத்தி, பின்னே கோவிலில் சக்கரைப்பொங்கலோடு சாப்பாடும் போட்டாங்க.
தில்லியில் இருந்து வந்துருந்த வேதவிற்பன்னர்கள் சங்கர், அருணாசலம், சூர்ய மூர்த்தி என்ற மூணு பேர் அக்ஷ்ரசுத்தமா வேதம் ஓதுனது ( எனக்குப் புரியலைன்னாலும்) கேட்க ரொம்ப இனிமையா இருந்துச்சு.
கோவிலைக் கட்டும்போதே கோபுரமும் கட்டி இருந்தால் வேலை சுலபம். இல்லை............ கோவில் வளாகத்துலே சுற்றுச்சுவர் எழுப்பிக் கோபுரம் கட்டறதுன்னாலும் அது பாட்டுக்கு நடக்கும். இப்போ என்னன்னா............ இருக்கும் இடத்துலேயே அட்ஜஸ்ட் பண்ணிக் கட்டணும். அதனால் கோவில் கட்டடத்தின் சில பகுதிகளை இடிக்க வேண்டி இருந்துச்சு.
கோபுரம் கட்டுவதைக்கூட ஒரு பதிவா செய்யலாமான்னு ஒரு யோசனை. 'கோபுரம் கட்டிப் பார்' என்று தலைப்பு:-)))
சரி.... இப்போதைக்கு யானையைப் பார்க்கலாம். யானை வருதாம் யானை வருதாமுன்னு சொன்னதைக் கேட்டப்ப........ நம்ம சைஸைதான் சொல்றாங்களோன்னு ஒரு சம்சயம். இல்லையாக்கும்..... குஞ்ஞன் யானையா வந்தது.
உற்சவமூர்த்தியை ஊர்வலமாக் கொண்டுவந்து முருகன் கோவிலில் வச்சுப் பூஜிச்சு முருகன் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக்கிட்டுப் போவது பதிவா நடக்கும் விஷய(மா)ம். முருகனும் கந்த சஷ்டி உற்சவம் முடிஞ்ச மறுநாள் திருக்கல்யாணம் முடிச்சு தேவியருடன் ஐய்யப்பன் கோவிலுக்குப் போய் வர்றார்.
இந்த வருசம் சீவேலிக்கு (ஸ்ரீபூதபலி என்றதுதான் சீவேலியா ஷார்ட்டாகிருச்சு) ஒரு யானை. சண்டிகரில் இன்னொரு(?) யானை ஏதுன்ற குழப்பத்துக்கு ஐயப்பன் கோவில் கமிட்டியிடம் பதில் கிடைச்சது. ஹரியானாவில் இருந்து கொண்டுவந்தாங்களாம். சின்னவந்தான். மூணு வயசு இருக்கும். குட்டனு செறிய கொம்பு வந்துண்ட்டுண்டு.!
நாங்க போய்க் கொஞ்ச நேரத்துலேயே பிரஸாதம் நம்ம கார்த்திக் ரெஸ்ட்டாரண்டுலே இருந்து வந்தாச்சு. அப்புறம் கோவிலில் ஏற்பாடு செஞ்சுருந்த ஸ்பெஷல் பஸ்ஸில் செட் முண்டு உடுத்திய சேச்சிம்மாரும், பட்டுப் பாவாடைகளுடன் கொச்சுகுட்டிகளும் தாலப்பொலிக்கான தட்டோடு வந்து இறங்குனாங்க, செண்டை மேளக்காரோடு ஒப்பம்.
ட்ராக்டர் ஒன்னில் ட்ரெய்லர் வச்சு அதில் ஐயப்பனின் படம் ஒரு சின்ன மண்டபம் செட்டப்பில். அதோ யானை நடந்து வருது......உற்சவரைச் சுமந்துக்கிட்டு.
PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி பாக்கி அடுத்த இடுகையில்
தொடரும்..................:-)
Wonderfully written!
ReplyDeleteLB road amman - periya paalaiyathu ammana? aah nostalgia!!!!
ReplyDeleteவழி விட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அடுத்த பகுதிக்கு.. :)
ReplyDeleteமணியோசையும் கேக்குதே :-))
ReplyDeleteவாங்க கொச்சு ரவி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மீண்டும் வருக.
வாங்க பொற்கொடி.
ReplyDeleteகொசுவத்தி ஏத்தியாச்சா:-)))))
வாங்க சுசி.
ReplyDeleteயானை வந்துக்கிட்டே இருக்குப்பா:-)))
வாங்க அமைதிச்சாரல்.
ReplyDeleteமணி ஓசை, ஃபேஸ் பெயிண்டிங் எல்லாம் இல்லைப்பா. உங்க மாதிரி அமைதியா வந்துச்சு:-))))
நல்ல பகிர்வு! மணி ஓசையில்லாத யானையா! மணி அடிச்சாதான நல்லா இருக்கும் :)
ReplyDeleteசொன்ன மாதிரி எழுதிட்டீங்க பாருங்க. :-)
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள் அம்மா.
//யானை வருதுங்க.. வழி விடுங்க !! //
ReplyDeleteவிட்டுட்டேங்க .. ஆனா இன்னும் யானை
வல்லையே ??
மீனாட்சி பாட்டி.
http://kandhanaithuthi.blogspot.com
ஓ. யானைக்கு முன்னால கோபுரம் வந்துடுச்சொ. செங்கல் பாலங்கள் அருமை.பொறுமையின் மறு அவதாரம் துளசி.
ReplyDeleteஇல்லாவிட்டால் இவ்வளவு குறிப்பு எடுத்து அதை பதிவேற்றீ.
படங்கள் அத்தனையும் விவரம் சொல்லுகின்றன.
கொஞ்சம் முண்டுடத்த கோபால் அவர்களின் மனைவி படமும் போட்டு இருக்கலாம்;)
ஸ்தபதியின் கண்டுபிடிப்பு அற்புதம்.
ReplyDelete”சண்டிகர் முருகனுக்கு ஐந்தடுக்கு ராஜகோபுரம்”....விரைவில் தர்சிப்போம்.
ReplyDeleteநீண்ட நாட்களாக உங்கள் பதிவுகள் கண்ணில் படவில்லை!
ReplyDeleteஎப்படியிருக்கீங்க டீச்சர்?
//பூஜை செய்த செங்கற்களை அஸ்திவாரத்தில் அடுக்கி அதன்மேல் 'ராமா' ன்னு எழுதிய பதினெட்டு லக்ஷம் ராமநாமங்களை வச்சுப் பூப்போட்டோம்.//
ReplyDeleteபடத்தைப் பார்த்ததும் என்னவென்று ஆர்வம் தோன்றியது.
’ராமா’ எழுதுவதும் ஒரு வித தியானமா?
இங்கே அரபியர்கள் சிலர் கையில் ருத்ராட்ச மாலை மாதிரி பளிங்கு,முத்து,இன்னும் பல விலை உயர்ந்த கற்களால் ஒவ்வொரு பரலையும் உருட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.மனதுக்குள் ஏதாவது வேண்டிக்கொள்கிறார்களோ என்னவோ?
கண்ணுக்கு விருந்தாய் படங்கள்...அதிலும் "சடாரி"யும் "முருகன் வள்ளி தெய்வானை" விக்கிரகமும் கொள்ளை அழகு... யானை பத்தி படிச்சதும் யானை படம் பாக்க ஆசையா எலியாரை (mouse) விரட்டினேன்...ஆனா காணோம்... தொடரும் போட்டுட்டீங்க... ஒகே அடுத்த பகுதி வந்து பாக்கறேன்...:)
ReplyDeleteவாங்க வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteஹரியானா யானைக்கு விவரம் பத்தாது!!!!
வாங்க குமரன்.
ReplyDeleteதம்பி சொன்னதை அக்கா செய்யலைன்னா எப்படி? :-)))))
வாங்க ரத்னவேல்.
ReplyDeleteஎல்லாம் 'நான் பெற்ற இன்பம்' வகையில் வந்துக்கிட்டு இருக்கு:-))))
வாங்க மீனாட்சி அக்கா.
ReplyDeleteஇதோ யானை வந்தாச்சுக்கா.
உங்களுக்காக கொஞ்சம் வேகமா ஓடிவந்து இப்போ மூச்சு 'இளைக்குது' பாருங்க:-)))))
வாங்க வல்லி.
ReplyDeleteகோபாலின் பொறுமையில் பாதி கடன் வாங்கினேன்:-)))
முண்டு சுற்ற நேரமில்லைப்பா:-)))
வாங்க இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteதேவைகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தாய்!
இதை அவர் தன்பெயரில் பதிவு செஞ்சு காப்புரிமை வாங்குனாரான்னு தெரியலை!
வாங்க மாதேவி.
ReplyDeleteஅநேகமா ஒரு வருசம் ஆகுமாம்!
வாங்க ராஜநடராஜன்.
ReplyDeleteரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன். நலமா?
உங்க கண்ணில் யானையா இருந்ததால்தான் பட்டுச்சோ:-))))
முழுமனசோடு எந்த வேலை செஞ்சாலும் அது தியானம்தான். இப்போ இந்தப் பதிவு எழுதறோம் பாருங்க.......அதுவும்:-)
இந்த ஜெபமாலை உருட்டுவது கிறிஸ்துவ மதத்தில் கூட இருக்கு பார்த்தீங்களா?
ஹரேகிருஷ்ணா ஆளுங்களும் பைக்குள் துளசிமாலை வச்சு உருட்டிக்கிட்டே இருப்பாங்க.
எல்லாம் எண்ணிக்கைக் கணக்குதான்!
வாங்க அப்பாவி தங்கமணி.
ReplyDeleteஇன்னிக்கு யானையார் வந்தே வந்துட்டாருங்க. இடுகை போட்டாச்சு. எலியை அங்கே விரட்டுங்க:-)