Friday, January 01, 2010

அட! சொல்லவே இல்லை!!!

புதுவருசத்தைப் 'புக் ஃபேரில்' இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம பதிவர்கள் பதிப்பகம் வச்சுருக்காங்கன்னு அங்கே போனதும்தான் தெரிஞ்சது. அஞ்சு ரூபாய் நுழைவுச்சீட்டு. புதிய தலைமுறை,கண்களில் இருந்து தப்பவே முடியாதபடி அமர்க்களமா விளம்பரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
கடைசியில் இருந்து ஆரம்பிச்சோம். விஸ்தாரமான இடம். பார்க்கிங் மோசமில்லை. தெருவிலிருந்து உள்ளே போகும் வழியெல்லாம் தோரண வாயில்கள் சிலபல. பாதையின் ரெண்டு பக்கத்திலும் பதிப்பகங்கள் அவுங்க புத்தகங்களை விளம்பரப்படுத்தி பேனர் வச்சுருக்காங்க. எல்லாமே ஒரே அளவுலே என்பதால் கண் உறுத்தாமல் இருந்துச்சு.
சில ஸ்டால்களைத் தவிர்த்து பல இடங்களில் குறைஞ்சது ரெண்டு பேராவது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரிசையின் கடைசியில் ஒரு ஜூஸ் ஸ்டால். நல்லது! அதேபோல கூடாரத்தின் மறுகோடியில் குடிநீர் விற்பனை. இதெல்லாம் இல்லாமல் எக்கச்சக்கமா பபுள் ரீ ஃபில் கேன்கள் ஒரு பக்கம்.

பெரிய நிறுவனங்கள் ரெண்டு வாசலும் திறந்து வச்சுருக்கு. அப்படியே நுழைஞ்சு அடுத்த தெருவுக்குப் போயிறலாம்!!!
தெருவில் வரிசைக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சந்துபோல் இங்கேயும் இடம் விட்டுருக்காங்க. நல்லாத்தான் இருக்கு குறுக்குத்தெரு.

மலையாள மனோரமா, விசாலாந்திரா ன்னு மலையாளம் தெலுகு ஸ்டால்கள். இன்னும் ஹிந்திக்கு ரெண்டும் சமஸ்கிரதப் புத்தகங்களுக்கும் ஒன்னும் கூட இருக்கு.

மக்கள் தொலைக்காட்சி, பொதிகையும் துண்டு போட்டு இடம் பிடிச்சு வந்துருக்கு. பொதிகையில் நல்ல கலெக்ஷன்ஸ் வச்சுருக்காங்க.

இன்னிக்குச் சும்மாப்பார்க்கணும். இன்னொருநாள் நிதானமா வந்து வாங்கணுமுன்னு தான் திட்டம் 'தீட்டி' இருந்தேன். ஆனால்.....கோபால் வேணுமுன்னா வாங்கிக்கோன்னு பர்ஸை வெளியில் அப்பப்ப எடுத்ததால் ஒன்னு ரெண்டுன்னு கொஞ்சம் வாங்கினேன்.
கிழக்கில் கூட்டம் அம்முது. எனக்கும் ஒரு 'அடியாள் '

காலச்சுவடில் 'ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள்'.


உணவுக்குன்னே ஒரு ஸ்டால். எனக்கென்னமோ...ஒரு சிலர் நினைவு வந்தது:-))) சாப்பிடாமல் பதிவு எல்லாம் எழுத முடியுமா? யோகா, சமையல் ஆன்மீகம்ன்னு எக்கச்சக்கம். கணினி சம்பந்தமா ஒரு ஏழெட்டு.

கார்ப்பரேட் சாமியார்களின் 'கடைகள்' அமோகப் பளபளப்பில்.

நாலைஞ்சு நிறுவனங்கள் வீதிக்கு ஒன்னா நாலைஞ்சு வீடுகள் வச்சுருக்கு!


இஸ்கானில் கண்ணன்லீலைகள் பாலர் படப்புத்தகம் கிடைச்சது. படங்கள் அருமை. சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லணுமுன்னு ஆசை. நியூஸி போனதும் பிள்ளைகளைத் தேடணும். ஒரே கண்டிஷன் 7 வயசுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ஏன்னு கேக்காது:-)))) போர்ட் புக் இருக்குமான்னு தேடினேன். கிடைக்கலை.
தெரிஞ்சமுகங்கள் ஒன்னும் கண்ணுக்குத் தெம்படலை. கடைசியில் வெறுத்துப்போனபோது ஞாநியைப் பார்த்தேன். நாலாம்தேதி புதுப்புத்தகம் ஒன்னு வருதாம். 'என் வாழ்க்கை என் கையில்'னு சொன்னார். ஆமாமாம்.

அம்புலிமாமா இளைச்சுக்கிடந்தார். யாரோ மும்பைப் பார்ட்டி நடத்துறாங்களாம் இப்போ. மராத்தி, ஹிந்தி, தெலுகு விற்பனை நல்லாவே இருக்காம். ஆனால்...தமிழ்தான்.....புள்ளைங்க அவ்வளவா.... சரி. விடுங்க. புதுவருசம், நல்ல நாளு. புலம்பலை இன்னொருநாள் வச்சுக்கலாமே
108 வருசம் கழிச்சுப் பொங்கலுக்குக் கங்கண கிரகணம் வருதாம். நம்ம கண்ணு கெட்டுறக்கூடாதே என்ற கவலையில் சீனாக்காரன் பத்தியமாச் செஞ்சு அனுப்புன கண்ணாடி. 20 ரூபா.

நாங்கள் போனபோது பகல் மணி மூணு. பரவாயில்லாமல் நல்ல கூட்டம்தான்.

மொத்தம் 466 ஸ்டால்களுக்கான இடங்கள். இதுலே ரெவ்வெண்டு வீட்டை பலர் எடுத்துருந்தாங்க.பெரிய குடும்பமுன்னா இடம் வேணும்தானே?
செக்யூரிட்டி! கண்காட்சி நடப்பைக் கேமெராவால் கவனிக்கிறாங்க.


வசதிகள் பரவாயில்லை. நாலைஞ்சு இடத்தில் க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி செஞ்சு வச்சுருந்தாங்க. பாக்கெட்டில் பணம் தீர்ந்து போச்சுன்னு சால்ஜாப்பு சொல்ல முடியாது:-)
சிவசங்கரிக்கருகில் யாருன்னு ஒரே குழப்பம்! விசாரிச்சேன். சுதா சேஷன். ஆடியோ புக். எம்பி3யாம். தன்னம்பிக்கை தருவாங்களாம்.


ஏற்பாடுகளைப் பார்த்தால் எல்லாம் பக்கவா அமைஞ்சுருக்கு. 33 வருச அனுபவங்கள். லைட்வெளிச்சம் நல்லாவே இருக்கு. அங்கங்கே மின்விசிறிகள் சுழன்றாலும் வேர்க்கும் அளவுக்குச் சூடாவே இருக்கு. ஃப்ரெஷ் காற்று உள்ளெ வர அவ்வளவா ஏற்பாடில்லை போல!
ஷுகர் செக்கப்

வெளியில் சிரிச்சுக்கிட்டே வாங்க சீனி இருக்கான்னு சொல்றோம்னு ஒரு இலவச சேவை. அதுக்கு எதிரில் ரத்தவங்கி. ஆம்புலன்ஸ் ஒன்னு நின்னது. அட்டகாசமா இருக்கு டிஸைன்.
மாலை நிகழ்ச்சிகளுக்கு மேடையும் எதிரில் இருக்கைவசதிகளும் நல்லாவே இருக்கு. இன்னிக்கு இறையன்பு நடத்தும் பட்டிமன்றமாம்.
கைமுறுக்கை அடுக்கிவச்ச அழகும். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலும்


ரெண்டு வருசத்துக்கு முன்னே இருந்ததைவிட இப்ப நல்ல முன்னேற்றம் தெரியுது. எது? சுண்டலான்னு கேக்கப்பிடாது.ஆமாம். நாம இப்போ புத்தகத் திருவிழாவைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.


நம்ம புதுகைத் தென்றலும் பரிசிலும் போட்டுருக்கும் ஸ்டால்களைப் பார்த்தேன்.

அட! சொல்லவேயில்லை!!!!

86 comments:

  1. நேரில் சென்றி சுற்றிய அனுபவம் கிடைத்தது. புகைப்படங்கள் நன்று, அதிலும் சுண்டல்காரரின் சிரிப்பு மிகவும் ரசித்தேன்.

    பதிவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மேடம்,

    நேரின் பார்த்தார்போல் அருமையாய் இருந்தது. சுண்டல் கைமுறுக்கு, சாரி புத்தகங்களைப்பற்றிய தகவல் அருமை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. :) 2010 முதல் நாள் ரவுண்ட் அப் முடிஞ்சுது புக் பர்சேஸ் முடிஞ்சுது புக்ஸ் போட்டோ இல்லியா? :)

    பரிசல் - புதுகைதென்றல் புத்தக அரங்கம் - lol :)))

    ReplyDelete
  4. போய்ட்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மீ த பர்ஸ்ட்டேய்..
    அன்பு துளசி டீச்சருக்கும் கோபால் சாருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. "அட! சொல்லவே இல்லை!!!"

    அட.. நீங்க சொல்லவே இல்லையே..

    நான், உண்மைதமிழன், பலாப்பட்டறை, லக்கி, எறும்பு ராஜகோபால் எல்லோரும் கும்மி அடிச்சிகிட்டு இரவு 8 மணி வரை அங்குதான் இருந்தோம்..

    ReplyDelete
  7. உங்களுக்கும் கோபால் சாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. புத்தாண்டு மின் அஞ்சல் வாழ்த்துக்களுக்கு நன்றி, துளசி(அக்கா)டீச்சர். உங்களுக்கும்,மகள் மற்றும் கோபால் சாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புத்தாண்டை புத்தக கண்காட்சியோடே அமர்க்களமா தொடங்கிட்டீங்க! :))

    என்றும் அன்புடன்
    தமாம் பாலா

    ReplyDelete
  9. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கும் போது ஏன் சென்னையில் நாம் வாழவில்லை என்று நினைத்துக்கொள்வதுண்டு?

    ReplyDelete
  10. என்னால போக முடியலையே

    ReplyDelete
  11. Wish you a very very Happy New year 2010. Sincerely do hope that we get to see the 1500 stories soon. Happy New Year!

    ReplyDelete
  12. //ஒரே கண்டிஷன் 7 வயசுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ஏன்னு கேக்காது:-)))///

    துளசி மேடம் இப்ப காலம் மாறி போச்சு... 7 வயசுகுல்லற இருக்கற புள்ளைங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    LK

    ReplyDelete
  13. புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசி &கோபால்.
    புத்தகக் கண்காட்சி பிரமாதம். பரிசல், தென்றல் சூப்பர்.
    உணவுக் கடையைப் பார்த்தா யார் ஞாபகம் வந்ததுன்னு எனக்கு ஒரு யூகம் இருக்கு. நான் தானே:))

    ReplyDelete
  14. அட நானும் அதே நேரத்துல அங்க தான் இருந்தேன். ஆனா பாருங்க யாருமே என் கண்ணுல படல...

    இன்னைக்கும் 1 மணிக்கு போகலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  15. துளசி டீச்சருக்கும், கோபால் அண்ணாவுக்கும்,மகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    டீச்சர், கதை சொல்ல, ஜூனியர் கோகி இருக்கானே, மறந்துட்டீங்களா?..:-)

    ReplyDelete
  16. அக்கா..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    என்னமோ ஏதோன்னு ஓடோடி வந்தேன்.

    ம்ம்.. இதுவும் நல்லாத்தான் இருக்குங்க!

    உங்க வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. உங்களுக்கு சாருக்கும். (அந்த சாரு இல்ல. கோபால் சாரு..!)

    ReplyDelete
  17. அன்பின் துளசி

    படங்கள் அருமை - ரசனை அருமை - புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்த திருப்தி கிடைத்தது - கோபாலுக்கு 3 டி கண்ணாடி 20 ரூப்பாக்கு வாங்கிக் கொடுத்தீங்களா = பாவம சொன்னதெல்லாம் செய்யுறாரு

    புதுகைத்தென்றல் மற்றும் பரிச்லக்கு வாழ்த்துகள்

    உங்களுக்கும் உங்கள் அவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  18. சுதா சேஷய்யன், சிவசங்கரி பக்கத்திலே, ஆன்மீகச் சொற்பொழிவாளர், ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவரும் கூட. கல்கி பத்திரிகையில் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதறாங்க. பொதிகையிலே அடிக்கடி பார்க்கலாம். இப்போவும் காலம்பர தினமும் திருவெம்பாவைக்கு விளக்கம் கொடுக்கிறாங்க பொதிகையிலே காலம்பர ஏழு மணிக்கு. சக்தி விகடனில் தேவாரச் சுற்றுலா எழுதறாங்க. அருமையான எழுத்து, அதைவிட அருமையான பேச்சும் கூட! விடறதில்லை! :))))) இவங்களையும், தேச.மங்கையர்க்கரசியையும், சனிக்கிழமை காலை பதினொருமணிக்கு தேச. மங்கையர்க்கரசியைப் பொதிகையில் பார்க்கலாம். இப்போ மாத்திட்டாங்களானு நாளைக்குத் தான் தெரியும்! :))))))))

    ReplyDelete
  19. புகை படங்கள் அருமை

    இங்கயும் கொஞ்சம் வந்து பாருங்க

    http://yerumbu.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete
  20. ரீச்சர்..!

    நியூஸிலாந்துக்கு போய் எதுக்கு புள்ளைகளைத் தேடுறீங்க..?

    இங்கயே ஆரம்பிச்சு கிளாஸ் எடுங்க.. உருப்படியா இருந்தீங்கன்னா நியூஸிலாந்து போய்ச் சேரலாம்..!

    அப்புறம்..

    தங்களுக்கும் தங்களது பாடிகார்ட் கோபால் ஸாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  21. தயவு செய்து இந்த ப்ளாக்கை படித்து பார்க்கவும், யோசனை பிடித்து இருந்தால் உங்களின் பிளாக்கில் அறிமுக படுத்தவும் . நன்றி - சர்புதீன், கோயம்புத்தூர்.
    http://www.vellinila.blogspot.com/

    ReplyDelete
  22. புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்!.இது வரைக்கும் ஒரு புத்தக கண்காட்சி பார்த்ததேயில்லை..அந்த குறை டீச்சரோட இந்த பதிவுல தீர்ந்திருச்சு.

    ReplyDelete
  23. வாங்க சுடுதண்ணி.

    முதல் வருகையா இங்கே? நலமா?

    என்னப்பா பேரு இது? மார்கழி மாசத்துக்கு வேணும்தான்:-))))

    ரசிப்புக்கு நன்றி. மீண்டும் வரணும்.

    ReplyDelete
  24. வாங்க பிரபாகர்.

    மூளைக்கு அங்கே உள்ளேயும் வயித்துக்கு இங்கே வெளியேயும் தீனி இருக்கேப்பா. விடமுடியுதா?

    வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் ஸேம் ஸேம்.

    ReplyDelete
  25. வாங்க ஆயில்யன்.

    மொத்தமும் வாங்குனபிறகு போட்டோ போட்டுறலாம். ஒரு பதிவுக்கான மேட்டராச்சே அது:-)

    ReplyDelete
  26. வாங்க அண்ணாமலையான்.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    இன்னொரு முறையும் போவேன். அப்பவும் வந்து வாழ்த்தணும்,ஆமா:-)

    ReplyDelete
  27. வாங்க கண்மணி.

    நீங்க ஃபிஃப்த்தேய்............!

    வாழ்த்து(க்)களுக்கு நன்றிப்பா.

    உங்களையும் இங்கே வாழ்த்திக்கறேன்.

    ReplyDelete
  28. வாங்க சரவணகுமரன்.

    சிரிப்பானுக்கு நன்றி.

    ReplyDelete
  29. வாங்க சூர்யா.

    நாங்க அஞ்சேகாலுக்குக் கிளம்பிட்டோம்.

    இது சும்மா ஒரு முன்னோட்டம்தான்:-)

    வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  30. வாங்க தமாம் பாலா.

    எல்லாம் 'காற்றுள்ளபோதே......' காரணம்:-)

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  31. வாங்க ஜோதிஜி.

    நான் சென்னையைவிட்டு வருசம் 35 ஆச்சு. நான் போன ரெண்டாம் வருசம், இவள் எப்படா போவான்னு காத்துருந்ததுபோல் தொடங்கி இருக்காங்க பார்த்தீங்களா?

    அதான் இப்போதையச் சான்ஸை விடலை:-))))

    ReplyDelete
  32. வாங்க சின்ன அம்மிணி.

    உங்க பிரதிநிதிதாங்க நான்:-)

    ReplyDelete
  33. வாங்க சந்தியா.

    வாழ்த்து(க்)கள் உங்களுக்கும் சொல்லிக்கறேன்.

    அந்த 1500ன் தொடக்கம் இந்த வருசம் பூஜை போட்டுறணும்.

    ReplyDelete
  34. வாங்க கலகலப்ரியா.

    நன்றியோ நன்றி:-)

    ReplyDelete
  35. வாங்க எல்.கே.

    7 இப்படியா இருக்கு?

    7 மாசமுன்னு திருத்திக்கலாமா?

    வம்பே இருக்காதுல்லே:-))))

    ReplyDelete
  36. வாங்க வல்லி.

    அது உணவுக்கடை இல்லைப்பா. உணவுக்கான புத்தகக் கடை:-)))))

    உங்கள் உணவு!

    ReplyDelete
  37. வாங்க கிருஷ்ண பிரபு.

    நான் அநேகமா திங்கள்!

    ReplyDelete
  38. வாங்க அமைதிச்சாரல்.

    ஜூனியர் கோகி இருக்கான். சொன்னால் அவனுக்குக் கேக்'காது'!!!

    ReplyDelete
  39. வாங்க பரிசல்.

    சாரு (வீட்டுலே) கிட்டே சொல்லிட்டேன்:-)

    பலிச்ச முஹூர்த்ததுக்கு பாதி விலைக்குக் கொடுங்க, அப்போ:-)

    ReplyDelete
  40. வாங்க சீனா.

    வாழ்த்து(க்)களுக்கு நன்றி. உங்களுக்கும் செல்விக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

    பாவமா? அவர் ஜாலியா 'சொன்ன பேச்சைக் கேக்கிறார்':-))))(என்று நம்புவோமாக)

    ReplyDelete
  41. வாங்க கீதா.

    ஒரு முப்பத்தியஞ்சே வருசத்துலே சென்னையில் என்னெல்லாம் மாற்றங்கள் வந்துருச்சு!!!!!!

    தொலைக்காட்சியை விடறதில்லைன்னு கங்கணம் கட்டிப் புத்தாண்டு சபதம் புதுப்பிச்சுட்டீங்களா? :-)))))

    ReplyDelete
  42. வாங்க எறும்பு.

    அங்கேயும் உங்க வீட்டுலே வந்து ஊர்ந்தாச்சு:-)

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  43. //தொலைக்காட்சியை விடறதில்லைன்னு கங்கணம் கட்டிப் புத்தாண்டு சபதம் புதுப்பிச்சுட்டீங்களா? :-))))) //

    நீங்க வேறே துளசி, இதெல்லாம் தினம் எங்கே போடறாங்க?? :D எப்போவோ கொடுக்கும்போது பார்க்கிறது தான். கூடவே இரண்டு புத்தகமும் பேரு எழுதி இருக்கேன் பாருங்க! :))))))))))

    ReplyDelete
  44. வாங்க உண்மைத்தமிழன்.

    எங்கூர் பிள்ளைகளுக்குத்தான் 'விஷயமே' தெரியாது. அதான் அங்கே போய்ச் சொல்லலாமுன்னு......

    உள்ளூர்லே விலைபோகலைன்னா அசலூர்லேதானே விக்கணும்:-))))

    இந்தப் புது வருடத்தில் உங்களுக்கும் ஒரு பாடிகார்ட் கிடைக்க அந்த முருகனை வேண்டிக்கறேன்!!!!

    ReplyDelete
  45. வாங்க சர்புதீன்.

    வெள்ளிநிலா என்ற பெயரே அழகா இருக்கு.

    பதிவர்களுக்கான சிறப்பிதழா?
    நோ ஒர்ரீஸ்...
    ஜமாய்ச்சுப்புடலாம்:-)

    ReplyDelete
  46. வாங்க சிந்து.

    என்னமோ நான் மட்டும் வருசம் தவறாமல் பார்க்கிறேனா?

    இதுதான் ரெண்டாவது நமக்கு. ரெண்டு வருசம் முன்பு ஒன்னாவது!

    ReplyDelete
  47. Enna Madam

    Ambulance-kku mukkali pottu muttu koduthirukiranga ?

    Anputan
    Singai Nathan

    ReplyDelete
  48. மிக அவதானமாக ஒவ்வொன்றையும் அவதானித்து மிக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நேரில் பார்த்தது போலிருந்தது.
    2010 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. // ரெண்டு வருசத்துக்கு முன்னே இருந்ததைவிட இப்ப நல்ல முன்னேற்றம் தெரியுது. எது? சுண்டலான்னு கேக்கப்பிடாது.//

    கண்டிப்பா கேட்கமாட்டேன். ஏன்னு கேட்டா, நானும் அந்த சுண்டலை சுவைத்துப் பார்த்தேனே !!

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  50. ம்ம்ம்ம்ம் நான் தான் போகமுடியல.. ஒவ்வொரு வருசமும் ஏக்க பெருமூச்சு தான் விடமுடியுது டீச்சர்

    ReplyDelete
  51. Thanks for sharing
    happy new year thulasithalam

    ReplyDelete
  52. //கார்ப்பரேட் சாமியார்களின் 'கடைகள்' அமோகப் பளபளப்பில்.
    //

    ரைட்...
    என்ன புக் வாங்குனீங்கன்னு சொல்லல??

    ReplyDelete
  53. புகைப்படங்களுடன் கூடிய நல்ல பகிர்வு. நன்றி டீச்சர்.

    ReplyDelete
  54. Dear Thulasi Madam,

    Wish you A very Happy New Year!

    I enjoy your writing from 'everyday manidhargal' Good job!
    Expecting the 'appuram 1500 stories'!

    Thanks and regards,
    Ezhilarasi Pazhanivel

    ReplyDelete
  55. வாங்க சிங்கை நாதன்.

    உடல்நலம் கொஞ்சம் தேறி இருக்கா? கோவியார் பதிவில் உங்க படம் பார்த்தேன். மகிழ்ச்சி.

    ஒருக்'கால்' வேண்டி இருக்குமுன்னு முக்காலி முட்டு கொடுத்துருக்காங்க போல:-))))

    உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  56. வாங்க டொக்டர் ஐயா.

    பதிவருக்கான முக்கிய தகுதி இந்த அவதானிப்பு இல்லையோ?:-))))

    கண்ணையும் காதையும் திறந்துவச்சாலே மேட்டர் குவிஞ்சுருதே!

    உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  57. வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

    //நானும் அந்த சுண்டலை சுவைத்துப் பார்த்தேனே !!//

    ஆஹா..... நான் அதைப் பார்த்தேன். க்ளோஸ் அப் க்ளிக்கினேன். முறுக்கு அடுக்கி வச்ச அழகைப் பாராட்டினேன்.

    ReplyDelete
  58. வாங்க நன் ஆதவன்.

    இந்த 33 வருசத்துலே 31 க்கு நானும் பெருமூச்சு விட்டுருக்கேன்.

    கவலையை விடுங்க. எனக்கொரு காலமுன்னா உங்களுக்கும் ஒரு காலம் வரும்.காத்திருங்க:-)

    ReplyDelete
  59. oops............ உங்க காலைவேற உடைச்சுட்டேனே(-: மாப்பு ப்ளீஸ்

    நான் நான் நான் நான் நான் ஆதவன்

    ReplyDelete
  60. வாங்க தேனம்மை லக்ஷ்மணன்.

    தேனாட்டம் வந்து தளத்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி.

    உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

    முதல்வரவுக்கும் அன்பான விசாரிப்புகள்.

    ReplyDelete
  61. வாங்க ஜெட்லி.

    பதிவுலேயே போட்டுருந்தேனே முதல் தவணை கொள்'முதலை':-)

    இதோ உங்களுக்காக மறுமுறை.

    கிழக்கில் கூட்டம் அம்முது. எனக்கும் ஒரு 'அடியாள் '

    காலச்சுவடில் 'ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள்'.

    இஸ்கானில் கண்ணனின் லீலை. படங்கள் நிறைஞ்ச குழந்தைகள் புத்தகம்.

    ReplyDelete
  62. வாங்க சரவணக்குமார்.

    வருகைக்கு நன்றி. மீண்டும் வரணும்.

    ReplyDelete
  63. வாங்க எழிலரசி.

    எவ்ரிடே மனிதர்கள் இன்னும் கூட நிறையப்பேர் இருக்காங்க எழுதப்படுவதற்கு!

    அப்புறத்தையும் தொடங்கித்தான் ஆகணும் சீக்கிரம்.

    ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  64. கீதா,

    அந்த ரெண்டும் எனக்கில்லை!!!!

    ReplyDelete
  65. சுடச்சுட போட்டோவோட பதிவு போட்டுடறீங்க மேடம், பொறாமையா இருக்கு ;))))))))

    ஒரே கண்டிஷன் 7 வயசுக்குள்ளே இருக்கணும். அப்பத்தான் ஏன்னு கேக்காது:-)))) //

    இன்னும் புள்ளைங்க இப்படித்தான் இருக்குன்னு நம்பிக்கிட்டு இருக்கீங்களே மேடம், ரெண்டு வயசுலயே சக்கை போடு போடுறாங்க ;)

    ReplyDelete
  66. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மேடம், சாருக்கும் சொல்லிடுங்க.

    ReplyDelete
  67. சுவாரசியமான பதிவு

    ReplyDelete
  68. நான் கடை ஏதும் போடலியே நீங்க வேற கடையை வல்லிம்மாவுக்கும் காட்டினதா சொன்னீங்களேன்னு ரோசனையா இருந்துச்சு.

    இதுவா மேட்டர். பரிசல் சொன்னமாதிரி வாய்முகூர்த்தம் பலிச்சா ஹைதை ஃபேமஸ் டபுள்காமீடா/ கராச்சி பிஸ்கட்டோட ட்ரீட் தர்றேன்

    ReplyDelete
  69. வாங்க அமித்து அம்மா.

    நீங்கசொன்னாச் சரியாத்தான் இருக்கும். அனுபவம் பேசுது:-))))

    நான் 26 வருசத்துக்கு முந்துன நினைப்புலே இருந்துட்டேன். அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு 7 மாசப்பிள்ளைன்னு மாத்திக்கிட்டொம்லெ:-))))

    கோபால்கிட்டே சொல்லவே வேணாம். அவரே ஒரு பின்னூட்டப் ப்ரேமி. படிச்சுருவார். பதிவைத்தான் படிக்கமாட்டார்:-)

    ReplyDelete
  70. வாங்க fundoo

    உங்க பெயரைத் தமிழில் டைப்பினால் பந்துன்னு வருது!!!!

    போகட்டும்.

    வருகைக்கு நன்றி. அடிக்கடி வந்து போகணும்.

    ReplyDelete
  71. வாங்க புதுகைத் தென்றல்.

    //ஹைதை ஃபேமஸ் டபுள்காமீடா/ கராச்சி பிஸ்கட்டோட ட்ரீட் தர்றேன்//

    ஊஹூம்....நோ டீல்.
    ஒத்துக்க மாட்டோம். பதிவர் புத்தகங்களையெல்லாம் நீங்களே வெளியிடுவதா வாக்குக் கொடுங்க. நம்ம வாக்கு பலிக்கும்.

    வாக்குக்கு வாக்கு = டீல்:-))))

    ReplyDelete
  72. பதிவர் புத்தகங்களையெல்லாம் நீங்களே வெளியிடுவதா வாக்குக் கொடுங்க. நம்ம வாக்கு பலிக்கும்.

    வாக்குக்கு வாக்கு = டீல்//

    deal deal deal

    ReplyDelete
  73. புதுகை,

    டீல் ஓக்கே:-))))

    ReplyDelete
  74. இன்றைக்கு எப்படியாவது புத்தகக் கண்காட்சிக்குச் சென்று விடவேண்டும்.இல்லையென்றால் பதிவுகளே போதும் என்று யோசிக்க வைத்து விடுவார்கள்...நேரில் சென்று வந்தாற்போல் தோன்ற வைக்கிறது உங்கள் அனுபவம்

    ReplyDelete
  75. சூரிய கிரகணபார்க்கற கண்ணாடி போட்டுட்டு நிக்கறது யாருங்க?

    சுண்டல்காரரின் புன்சிரிப்பு= ஏழைசியின் சிரிப்புதான் எத்தனை அழகு..

    காலச்சுவடின் ஜே.ஜே. சில குறிப்புகள்,புளியமரத்தின் கதை காலச்சுவடு நிறுவனர் மறைந்த எழுத்தாளர் சுந்தரராமசாமி எழுதியது. அருமையான புத்தகங்கள்.

    அம்புலிமாமா படிச்ச வளர்ந்த புள்ளைநானு. இப்போ உள்ள பசங்களுக்கு...வேண்டாம் புலம்ப வேணாம்..

    நிறைவாக இருத்தது பதிவு.

    ReplyDelete
  76. ஆஹா...,
    கண்ணாடில ஜொலிக்கறாரு..சாரா அது..?
    20ரூ.வுக்கு கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டு..பர்ஸ பிடுங்கிட்டீங்களா..?

    டீச்சர் சரளமான வார்த்தைகள்..
    யதார்த்தமான எண்ணங்கள்...
    நானும்தான் வந்திருந்தேன்..உங்க அளவுக்கு கவனிக்கலீங்களே....
    தேமேன்னு சுத்தீட்டு வந்ததோடு சரி...

    ReplyDelete
  77. அட ! நான் நேரில் பார்த்தது போல இருக்கு

    அருமையான அனுபவ கட்டுரை துளசி டீச்சர் .

    அதிலும் அந்த சுண்டல்காரரின் சிரிப்பிலே தன்னம்மிக்கையை பார்த்தேன் .

    நல்லா எடுத்திருக்கீங்க டீச்சர் .

    ReplyDelete
  78. அட ! நாந்தான் கொஞ்சம் லேட்டா வந்திட்டேனே டீச்சர் .

    ஹோம் ஒர்க் எதுவும் கொடுத்திடாதீங்க டீச்சர் .

    ReplyDelete
  79. வாங்க கோமா.
    அதென்ன வெளியூர்க்காரர் மாதிரி சொல்றீங்க???

    உள்ளூர் நிகழ்ச்சிநிரலில் நீங்கள் இதைச் சேர்த்துக்கலையா?

    அச்சச்சோ.....வடை போச்சே:-)))

    ReplyDelete
  80. வாங்க நாஞ்சில் பிரதாப்.

    நம்ம பக்கத்துக்கு முதல் வரவா?

    இருக்கணும். அதான் நம்ம ஆளை அடையாளம் தெரியலை!!!

    அம்புலிமாமாவை அந்தப் படங்களுக்காகவே வாங்குவேன். திண்ணையும் முற்றமும் தூண்களுமா இருக்கும் வீடுகள்!!!!

    ஹூம்..... காலம் மாறிந்தே.........

    ReplyDelete
  81. வாங்க கும்க்கி.

    அந்த 20 ரூ.விலே 10% கழிவு வேற கிடைச்சது:-))))

    பதிவர்களுக்கான முதல் தகுதியே கண்ணையும் காதையும் திறந்து வச்சுக் கவனமா இருக்கணும் என்பதுதான்:-))))

    நமக்கும் மேட்டர் தேத்தணுமில்லே?

    ReplyDelete
  82. வாங்க ஸ்டார்ஜன்.

    ஒரே ஒரு கண்டிஷன். பதில் சொன்னால் ஹோம் ஒர்க் இல்லை.

    நீங்கள் 'அவரா?'

    ReplyDelete
  83. /// துளசி கோபால் said...

    வாங்க ஸ்டார்ஜன்.

    ஒரே ஒரு கண்டிஷன். பதில் சொன்னால் ஹோம் ஒர்க் இல்லை.

    நீங்கள் 'அவரா?' ///

    புரியலியே டீச்சர் ...

    ReplyDelete
  84. ஸ்டார்ஜன்,

    ரொம்ப வருசங்களுக்கு முன் இதே பெயரில் ஒரு நண்பர் அப்போ எழுதுன ஒரு தொடரில் (மரத்தடி குழுமத்தில்)பின்னூட்டி இருந்தார். இப்போ அதே பெயரைப் பார்த்ததும் அவரா இவர்ன்னு யோசிச்சுக்கிட்டே(!!) இருக்கேன்.

    ReplyDelete