Wednesday, April 19, 2006

கல்லத் காம் மத் கர்

கல்லத் காம் மத் கர்

ஒரு கெட்டவன், நல்லவனா ஆயிட்டப்புறம் கெட்டவனா மறுபடி மாற முடியாதாம். இப்படி ஒரு நீதியைச் சொல்ற சினிமா இது.

'மல்ட்டிபிள் ஆக்டர்'னு ஒரு புது கேட்டகிரி வந்துருக்குப்பா. ஹூம்...... வாழ்வு?

ரொம்ப நாளைக்கப்புறம் விவேக். சரி, கொஞ்சம் சிரிக்கலாமுன்னு நினைச்சால்.......விவேக் ஏமாத்திடறார்.

ஆனா, குப்பைத்தொட்டி பக்கத்துலே நின்னுக்கிட்டு இருக்கற பொண்ணு பரவாயில்லை. விவேக் 'ச்சார்செளவ் பீஸ் காம்' செய்யறப்ப அது எங்கே இருந்தாலும் (சரி வீடு, ரோடு, ரெஸ்டாரண்ட்டு இப்படி)'நீ செய்யறது கொஞ்சம்கூட சரியில்லை, வேணாம். கல்லத் காம் மத் கர்'னு சொல்றப்பவும் சரி,இதுக்கு என்ன அர்த்தம்னு விவேக் தலயைப் பிச்சுக்கறப்பவும் சரி, ஏதோ நல்லதாஒரு காமெடி ஸீன் வருதுன்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

ஆனா ஒரு சந்தேகம் க்ளியர் ஆச்சு. 'டிஷ்யூம்' படத்துலே அம்மாவா வர்றது மாளவிகான்னு போட்டுருந்துச்சுலே.நான்கூட பிரியங்கான்னு சொல்லி இருந்தேனே(-: ( ரொம்ப முக்கியம்!)
அவுங்க இந்தப் படத்திலும் அண்ணியா வர்றாங்க. டைட்டிலே அவுங்க பேரு 'அண்ணி மாளவிகா' ..... ?

வெள்ளித்திரையில் கண்டு 'கழிக்க'ப்போறீங்களா? இதோ படத்தின் பெயர்,'கள்வனின் காதலி'

ஹூம்ம்... இந்தப் பேருலெ கல்கி ஒரு கதை எழுதியிருந்தாருல்லெ?
எல்லாம் நேரம்.

சூர்யாவோட நடிப்பு( மட்டும்) கொஞ்சம் ஓக்கே. ஆனா திரையில் முகம் கொஞ்சம் கஷ்டப்படுத்துதுப்பா(-:
அது ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?


இந்த ஒரு படத்துக்காக ஒரு பதிவுன்றது கொஞ்சம் ஓவராத் தோணுச்சு. அதாலே நான் சமீபத்துலே(!)பார்த்த சில படங்களையும் சேர்த்தேச் சொல்லிடறேன்.

'டிஷ்யூம்' னு ஒரு படம்.

நல்லா இருக்கு. சினிமாவுலே வர்ற 'டூப்' ஆளுங்களைப் பத்துன கதை. அட, கதையை விடுங்க. இந்த டூப்புங்களுக்குப் படப்பிடிப்புலே எவ்வளோ ரிஸ்க். அடிபட்டுப் படுத்த படுக்கையா ஆனவங்க பேர் வெளிச்சத்துக்கு வருதா? இல்லே அப்படி ஆனப்புறம் நிரந்தர வருமானம் எதாவது கிடைக்க இன்ஷூரன்ஸ் இருக்கா?

கஷ்டம் அவுங்களுக்கு, புகழ் மட்டும் நாயகனுக்கு! நிழல் வேறு, நிஜம் வேறுன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாத் தேவலை.

சித்திரம் பேசுதடி:

பரவாயில்லை. நாயகியின் அப்பான்னாலும் மனுஷந்தானே? வேற கோணத்துலே பார்க்கணும்.கானாப் பாட்டு ஒண்ணு வருது. என்னவோ எல்லோரும் புகழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இதைவிட நல்ல பாட்டுங்க கேட்ட ஞாபகம் வருது.

போட்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட்டு. இல்லீங்களா?


கோடம்பாக்கம்:

எனக்குப் பிடிச்சிருந்துச்சு. சினிமா சம்பந்தப்பட்ட படம். மொதப் படம் பண்ணுற டைரக்ட்டர் படற அவஸ்த்தை.( கொஞ்சம் அழுத்தம் வேணுமுன்னுதான் ட்,த் எல்லாம் எக்ஸ்ட்ராவாப் போட்டுருக்கேன்!)

மணிவண்ணன் நடிப்பு நல்லா இருந்துச்சு. ' நீவேறப்பா, அவ பொசுக் பொசுக்'னு கட்டிப் பிடிச்சுடறா'ன்னு சொல்லிக்கிட்டே கொஞ்சம் ஜொள்ளொடு பேசறப்ப சிரிப்பு வந்துச்சு. கடைசி சீன்லே மணிவண்ணனோட மனைவியைக் காமிக்கறப்ப(?) மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.


கலையரசிதான் கொஞ்சம் ஓவரா ப்ளேடு போட்டாங்க.


கலாபக்காதலன்:

அந்தப்பொண்ணு,அதாங்க அக்ஷயா வர்றப்ப எரிச்சல் வந்துச்சு. அதான் நடிப்போட வெற்றி இல்லீங்களா?

நாயகன், முரட்டு மூஞ்சியிலே நல்லவன்! அந்த 'ஊஞ்சல்' மாடர்னா இருக்குல்லே?

நாயகி நல்லா, அது என்ன சொல்வீங்க,குடும்பப்பாங்கு,ரைட்? அப்படி இருக்காங்க.

படத்தோட நீதி- மச்சினிச்சியை வீட்டுலே சேக்கக்கூடாது. அடக் கடவுளே!


மதராஸி:

'துப்பாக்கி சத்தம்'


தம்பி:

மாதவன்.


தவமாய் தவமிருந்து:

எல்லாரும் எழுதி ஓய்ஞ்சுட்டாங்க.

கல்லூரி மாணவனா சேரன்!


இதயத்திருடன்:

ஊஹூம்....... பாதி பார்த்து வச்சுருக்கேன்.


சுதேசி:

விஜயகாந்த்...............(ஜெயிச்சபிறகு பாக்கட்டுமா?)



........ ஊருக்குப் போனதுலே நிறையப் படங்கள் பார்க்க விட்டுப்போச்சு. இப்பத்தான் ஒண்ணொண்ணாப் பார்த்துக்கிட்டுஇருக்கேன்.


சினிமா விமரிசனங்கள் கொஞ்சநாளைக்கு வராது. ஆனா நீங்க கொஞ்சமும் எதிர்பாராத நேரத்துலே, எதிர்பாராத படங்களைப் பத்திக் கட்டாயமா எழுதத்தான் போறேன்.


மீண்டும் சந்திக்கும்வரை ........bye

36 comments:

said...

காலை எழுந்தவுடன் ஒரு சினிமா பின்பு பதிவில் ஒரு பயணக் கட்டுரைன்னு ஓடுது போல இருக்கு.

உங்க ராஜ்ஜியம்தானே. நடத்துங்க. ஹூம்....(இந்த பெருமூச்சு பதிவெழுத நேரமில்லாமல் வலைப்பூவை தொங்கலில் விட்டிருக்கும் என்னை மாதிரி ஆசாமிகளுக்கு சமர்ப்பணம்)

said...

கொத்ஸ்,

//இந்த பெருமூச்சு பதிவெழுத நேரமில்லாமல் வலைப்பூவை தொங்கலில்
விட்டிருக்கும் என்னை மாதிரி ஆசாமிகளுக்கு சமர்ப்பணம்)//

அப்படியே ஆ(க்)கக் கடவது.

//காலை எழுந்தவுடன் ஒரு சினிமா //

இல்லையில்லை. ராத்திரிதான் சினிமா. தூக்கமாத்திரை ரொம்ப எடுக்க வேணாமுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.
அதனாலே....:-)

said...

டிராஜ்,

மனுஷனைச் சும்மா விடமாட்டீங்களே?

said...

//கள்வனின் காதலி//
அடக்கடவுளே அந்தக் கண்றாவிய நீங்களும் பாத்தாச்சா? தெரியாத்தனமா போன சனி-ஞாயிறு நீண்ட வார இறுதியில கொஞ்சத்தைப் பயனில்லாமக் கழிச்சுத் தொலைச்சேன் இந்தப் ப(ப்ப)டத்தாலே!! :O(

சித்திரம் பேசுதடின்னாங்க. பேசட்டும்; வலைப்பதிவுல அலசிக் காயப்போட்டதுக்கப்பறம் பாக்கறதைப் பத்தி முடிவு பண்ணிக்கலாம்னு இருக்கேன்.

நான் படத்திட "தரம்" கண்டு பிடிக்க (கிட்டத்தட்ட 85% சரியா பலன் தந்து நேரத்தை மிச்சப்படுத்துற) ஒரு வழி வைச்சிருக்கேன். கேட்டுக்கோங்க! சுத்தத் தமிழ்லே பெயர் இருந்தா வலைப்பதிவுக்குலமே, படத்தைப் பாத்துராதிங்க!!! அப்பிடியும் சந்தேகமா?யாரு இயக்குநர்னு பாத்துட்டு படத்தைப் பாக்கறதா இல்லையானு தீர்மானிங்க! உதாரணங்கள் - முதல் வகைக்கு: கள்வனின் காதலி, பவளக்கொடி போன்றவையும், இரண்டாம் வகைக்கு: தவமாய் தவமிருந்து, கண்டநாள் முதல் போன்றனவுமாம்! :O)

said...

அக்கா, என்னக்கா, சூர்யாவப் போய் நடிக்கிறார் அது இதுங்கறீங்க.. அது ஒரே கோணங்கி சேஷ்டை தான்... நீங்க் ராத்திரில பாத்ததுனால, தூங்கிகிட்டே அப்படி நினைச்சிகிட்டீங்க போலிருக்கு :)

said...

ஷ்ரேயா,

வாங்க வாங்க. பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு,ஆனா க.கா. பார்க்கமட்டும் நேரம் இருந்துச்சா? நறநறநறநற

நீங்க சொன்ன டெக்னிக்கை இனிமேப் பயன்படுத்தப்போறேன்.

said...

பொன்ஸ்,

ஆமாம். ஒரு டைரக்டருக்கு நடிக்கத் தெரியாதா? பின்னே எப்படி நடிப்பை
மத்தவங்ககிட்டே இருந்து வெளியே கொண்டுவர்றது? ஹா.....

கோணங்கியா நடிக்கச் சொன்னா நடிச்சுடுவாரா? :-)))

என்னா தூக்கக்கலக்கமோ போங்க:-))))

said...

சுஜாதா இந்தப் பாடாவதியைப் பத்தி குமுதத்தில எழுதினது,"சூர்யாவைப் பார்த்தவுடனே தான் எங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சு நாளாச்சுன்னு ஞாபகத்துக்கு வந்தது."

அந்த "கலத் காம் மத்கர்" அப்படின்னு சொல்லீட்டு வார பிச்சைக்காரப் பொண்ணு சன் மீசிக்ல இப்போ வீஜேவாம்.எல்லாம் காலக் கொடுமை தான்.

said...

//பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு,ஆனா க.கா. பார்க்கமட்டும் நேரம் இருந்துச்சா? //
ஹி ஹி.. :O)

க.கா. கக்கா என்டு கண்டுபிடிச்சாச்சு; ஆனா "கல்லத் காம் மத் கர்" என்டா என்ன என்று நீங்க சொல்லலியே?

said...

ஐயோ.....சூர்யா சூர்யான்னு சொல்லாதீங்க...எஸ்.ஜே.சூர்யான்னு சொல்லுங்க....சூர்யாங்குற பேர்ல ஒரு ரொம்ப நல்ல நடிகர் இருகாரு. ( நான் அகில அண்ட சூர்யா ரசிகர் மன்றத் தலைவனாக்கும்.)

கலத் காம் மத் கர்-னா இந்திப் படமா? அதுல விவேக் நடிச்சிருக்காரா? கேள்விப் பட்ட மாதிரியே இல்லையே!

said...

ஷ்ரேயா,

கல்லத் காம் மத் கர் = தப்பான வேலையைச் செய்யாதே ( நீ தப்பு பண்ணறே. அதனாலே அந்தத் தவறான
வேலையைச் செஞ்சுறாதே)

அப்படியே இதுக்கும் சொல்லிடறேன்.

ச்சார் செள பீஸ் = 420 ( ஃபோர்ட்வெண்ட்டி) 'மோசடி'ன்றதுக்குள்ள குற்றப்பிரிவு.

said...

கள்வனின் காதலி : தொலைகாட்சியில் சில காட்சிகள் பார்த்தே பார்ப்பதில்லை என முடிவு செய்த படம்.

சித்திரம் பேசுதடி : மோசமில்லை என்றாலும் மற்றவர் சொல்வது போல் ஆகா ஓகோ என்று சொல்ல முடியவில்லை.

கோடம்பாக்கம் : எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது .சேரன் மாதிரி இயக்குநர் இந்த கதையை செதுக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .நல்ல கதை.அழுத்தம் குறைவு.

டிஷ்யூம் : முதலுக்கு மோசமில்லை.

கலாபக்காதலன் : மாதவன் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மதராஸி : ஐயா! ஆள விடுங்க!

தம்பி : பார்க்கலாம்.

தவமாய் தவமிருந்து : பார்க்க வேண்டிய படம்

இதய திருடன் : சரணுக்கு சரக்கு தீர்ந்திருச்சோ!

சுதேசி : விருத்தாசலத்தில் விதேசி!

said...

ராகவன்,

//கலத் காம் மத் கர்-னா இந்திப் படமா? அதுல விவேக் நடிச்சிருக்காரா?
கேள்விப் பட்ட மாதிரியே இல்லையே! //

ஹிந்திப் படமுன்னா விவேக்(ஒபேராய்) நடிக்கமாட்டாரா?:-)))

இது கள்வனின் காதலி என்ற 'சடா'படம். ( சடா- சட் கயா = அழுகல்)

அட, நீங்கதான் சூர்யா( சன் ஆஃப் சிவகுமார் & ஜோதிகாகூட கிசுகிசுக்கப்படுகிறவர்) மன்றத்தலைவரா?
தெரியாமப்போச்சே(-:

இதுலேகூடப்பாருங்க J.S Suryaன்னாலும் அதே ஜோதிகா, சன் ஆஃப் சிவகுமார்னு வருதே. இப்ப என்ன செய்ய?
இப்ப என்ன செய்ய? இப்ப என்ன செய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய?

said...

ஜோ,

இப்படித்தான் 'நச்'னு ஒரு வரி விமரிசனம் கொடுத்துருக்கணும். கொன்னுட்டீங்க போங்க.

said...

ஆமா தெரியாமத்தான் கேக்கறேன். கடல் கடந்து இருந்துக்கிட்டு இதையெல்லாம் எப்படிங்க பாக்கறீங்க? திருட்டு டிவிடியிலயா? இதெல்லாம் சரியே இல்லையே :-( இதுல இது சரியில்லேன்னு கமெண்ட் வேற.. ஹூம்..

சரி.. நாங்க இங்க இருந்துக்கிட்டு பாக்கறதுக்கே முடியாம (என்னத்த முடியாம? வேணாமேன்னுட்டுத்தான்)
இருக்கறோம். உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு..

அதுபோட்டும். இத எல்லாம் பாக்கறதுக்கும் பொறுமை வேணுமே. அது உங்க கிட்ட நிறையவே இருக்கு போல..:-)

எஞ்சாய் பண்ணுங்க..

ஜோ உங்க ஒரு வரி விமர்சனம் கூட நல்லாத்தான் இருக்கு.

said...

சுதர்சன்,

இப்படி விமரிசனம் வந்துச்சா? எப்போ? நான் பார்க்கவே இல்லையே(-:

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடின்னு பாடிக்கிட்டே 'கல்லத் காம் மத் கர்' பொண்ணைத்
தொலைக்காட்சியிலே பாருங்க. வேற வழி?

said...

டிபிஆர்ஜோ,

என்ன திருட்டு டிவிடியா? அய்யகோ..... இப்படிக் குறைச்சு மதிப்பிட்டுவிட்டீர்களே (-:
அய்யகோ........ ம்ம்ம் ( அழுவாச்சி)

வந்து பாருங்க. எல்லாம் ஹாலோக்ராம் போட்ட ஒரிஜனல் அக்மார்க் ப்ரிண்ட்.
க்ளப்புக்கு வாங்கறோமுன்றது ஞாபகம் வரலையா?

அய்யகோ...ம்ம்ம்ம் (அழுவாச்சி)

said...

thulasi azha vendaam. seeing thappu movies itself is a punishment.adhuvum VELLAI adikkira cinema ellaam paarthu irukeenga.nalla galattaa. vivek--vivek oberai
surya-sj surya
thamizh thappu
hindi galath
appasaami sirithu pallu sulikki vittathu. manu

said...

மானு,

இங்கே பல் சுளுக்கு எடுக்கறாங்க. வர்ரீங்களா? 'சொத்தையையும் சொத்தையும்' புடுங்கிருவாங்க:-)

said...

அம்மா,
நான் சினிமாவை பார்த்து ஆறு வருஷமாகுது ஏன்னு தெரியல வரவர சினிமாவே பிடிக்கலை. எல்லாரும் சொன்னாங்கன்னு inbetween gapல சந்திரமுகி பார்தேன், அவ்ளோதான் தமிழ் சினிமாவ வாழவச்சிட்டு அப்பறம் Fanta,Limca க்கு - 10 ரூபா தண்டம் (கோலா எனக்கு பிடிக்காது)கொடுக்கனும். இது தேவையா?

said...

கள்வனின் காதலியை முழுவதுமாகப் பார்த்ததற்காகவே உங்களைப் பாராட்டலாம். அமிர்தம், ஜூன் ஆர், தீண்ட தீண்ட, எல்லாம் பார்க்க ஆரம்பித்தாயிற்றா?

said...

சிவமுருகன்,

எப்படிப்பா இந்தக் காலத்துலே இப்படியெல்லாம் இருக்கமுடியுது?
ஆனா, உங்க மன உறுதியைக் கட்டாயம் பாராட்டணும். 'க்ரேட்'!
சினிமாவை விட்டதாலே 'பெரிய இழப்பு'ன்னு ஒண்ணும் கிடையாதுதான்.
எனக்கும் கோலா பிடிக்காது. ஃபேண்டாதான் ஃபேவரைட். அதுவும் எப்பவாவதுதான்.

அதுசரி, டிவி. பாக்குற பழக்கம் இருக்கா?

said...

இல்லையே பாலா.

இன்னும் இந்தப் படங்கள் வரலை. ஒரிஜனல் மட்டுமே வாங்கறதாலே
கொஞ்சம் லேட்டாத்தான் வருது.
ஒளவையார் சொன்னமாதிரி 'பொறுமை என்னும் நகை(யும்) அணிந்து
பெருமை' கொண்டிருக்கின்றேன்:-)

said...

பாதரசப் (mercury) பூக்கள் :O) பாத்தீங்களா??

said...

ஷ்ரேயா,

இன்னும் பார்க்கலை. இல்லேன்னா அதுக்கும் ஒரு 'வரி' போட்டுருப்பேன்லெ.
நல்லா இல்லேன்னு 'பின்னூட்டவழிச் செய்தி' வந்துருக்கு.

said...

துளசி அம்மா,

அந்த க.கா(கஸ்மாலத்தின் காதலி) நீங்களும் பார்த்தீர்களா. விதி வலியது :-(

சித்திரம் பேசுதடி
அஜித் ஷாலினி நடிச்ச அமர்களம் படத்தை மிக்ஸில போட்டா புது ஜூஸ் ரெடி

//கலாபக்காதலன்

ஹூம். இதுக்கு மச்சினிச்சியின் மன்மத மனது (ரொம்ப டிஸென்ட்டா இப்படிதான் சொல்ல முடியும்) அப்படின்னு பேரு வச்சிருக்கலாம். இதுவும் 'தல'யோட வாலி ஜூஸ். இந்த ஹீரோ முடியே வெட்ட மாட்டானா . அவ்வளவு பஞ்ச பரதேசியா (எங்க அப்பா கொஞ்சமா முடி வச்சதுக்கு இப்படிதான் திட்டுவாரு, அதுவும் வெயில் காலத்துல.. இடியட் எப்ப பார்த்தாலும் டோப்பு அடிச்சமாதிரியே இருக்கான்)

// மதராஸி

காதுல பூ (சூப்பர் ஸ்ட்டாக்கிஸ்ட்)

// தவமாய் தவமிருந்து

சேரன் சார். ஒண்ணு அழுவாதிங்க.. இல்ல அழுது முடிச்சிட்டு டயலாக் பேசுங்க. 2-ம் சேர்த்து செய்ய வேண்டாம் பிளீஸ்


// தம்பி

வழக்கமான படத்துல கொஞ்சம் 'தல' சே வசனம். இதுலயும் தலைவனும் தலைவியும் மரத்தை சுத்தி பாட்டு பாடுறாங்க. இதுல என்ன இருக்குன்னு இத டையரடக்கரு அப்படி பேட்டி குடுத்தாரு

//இதயத்திருடன்

வேணாம் வலிக்குது. எவ்வளவு நேரம்தான் தாங்குறது. இங்க பாருங்க

//சுதேசி

கடவுளே...சுத்தமான சத்திய சோதனைடா இது.. இந்த பெரியப்பாவுக்கு இப்படி ஒரு ஜோடியா ?, அதுவும் பாட்டுக்கு மட்டும்

said...

அம்மா,
டீவியையும் விட்டு 3 வருஷம் ஆச்சு. பேப்பர் கூட வலையில வர்ர ஒரு சில தலையங்கம் தான், அவ்வளவே. எப்பவாது யாராவது சொன்னா குறிப்பிட்ட நாள் பேப்பரை எல்லாத்தையும் படிப்பது அபூர்வம்.

மற்றபடி நட்பும், பதிவும், அம்மை மீனாட்சியும், திருமால் பெருமை சொல்வதும், அவன் மருகனை சுற்றி வருவதும், தற்போதைய என் பணி.

நட்புனா எங்ககூட 6வது 7வது படிச்சவங்களோட கூட நட்பு தொடருதுனா பாத்துக்கோங்க.

இந்த வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு, 'போரே' அடிக்கல.

ஆபிஸ்ல கூட(கைஸே முஸ்குராத்தே ரெஹத்தே ஹோ?) எப்டி சிரிச்சிக்கிட்டே இருக்கேனு? கேப்பாங்க அதுக்கும் ஒரு சிரிப்பை பதில் சொல்லி முடிச்சிருவேன்.

said...

முன்னாடி 2002ல நான் டிவி சானல் மாத்துன 3வது வினாடி இது என்ன படம்னு சொல்லிருவேன். இப்ப கூட எங்கயாவது(டிவியோ, சினிமாவொ, போஸ்டரோ) ஒரு கட்டம் நான் பார்த்த படம் வந்தா உடனே படம் பேரு, அடுத்த காட்சி என்ன வரும்னு எல்லாம் சொல்லிருவேன்.

இப்ப எல்லாம் தலைகீழ். ஒரு நாள் என்னோட மிண்ணஞ்ஜல்ல அஸினோட போட்டோ வந்தது. எனக்கு யார்னே தெரியல. அனுப்புனவன்ட்ட கேட்ட, வரபோர பொண்டாட்டி அழப்போறா, சொல்றான், அழுவாங்களோ, சிரிப்பாங்களோ அஸின் கையலயா? எல்லாம் அந்த அரங்கன்,அங்கையர் கன்னியோட கைல தான் இருக்குன்னு சொல்ல அவன் மெயில் பன்றதே விட்டுட்டான்.

said...

கார்த்திக்,

மனசு வெறுமையா இருக்கறதாலெ வர்ற படம் ஒண்ணுவிடாமப் பாக்குறீங்களா?:-))))

said...

(சிவ)முருகா,

'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா......'

இப்படியும் இந்தக் காலத்துலே பிள்ளைங்க இருக்காங்கன்னா.....
கலிகாலம்னு நினைக்கத்தான் வேணும்.

போட்டும் அஸினும் பிசினும் நமக்கெதுக்கு.

said...

//இப்படியும் இந்தக் காலத்துலே பிள்ளைங்க இருக்காங்கன்னா//

எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்.

said...

துளசி அம்மா,
முடிந்த வரையில் தனியாக அமர்ந்து சிந்திப்பதை தவிர்க்கிறேன், இருந்தாலும் இந்த விஷயத்தில் என் மூளை ஒரு மல்டி ப்ராசஸர் தான் :-).

இந்த படத்தை எல்லாம் தனியா பாக்க முடியுமா. பக்கத்து ஊர்ல என்னோட கூட்டாளி இருக்கான். அந்த கிராமத்துக்கு போறப்ப பாக்குறதுதான். இப்ப அவனும் வேற ஊர்க்கு போறான்:-(

said...

துளசி மேடம், கலாபகாதலனை இந்டெர்னெட்டில்ரிருந்து இறக்கி வச்சிரிக்கேன். பாக்கிறேன். S.J. சூர்யான்னு சொன்னாலெ வீட்டுக்காரம்மா அடிக்க வரங்க.

ஜோசப் சார் எங்களுக்கு திருட்டு விசிடி கூட கிடைக்க வழியில்லை. நல்ல படங்கள் நல்ல விசிடியில் கிடைத்தால் காசு கொடுக்க தயக்கமில்லை. எங்களின் ஒரே நம்பிக்கை torrents தான்

said...

சிவா,

கானடாலே தமிழ்ப்படம் கிடைக்கலையா? டொராண்ட்டொலெ எக்கச்சக்கமா இருக்குன்னு கேள்விப்பட்டேனே!

பேசாம அங்கே இருக்கற வலைஞர்களை வாங்கி அனுப்பச் சொல்லுங்க. இல்லேன்னா மலெசியாலெ இருந்தே அந்த வீணை.காம்
ஆளுங்க அனுப்பி வைப்பாங்களே. என்ன ஒண்ணு, கிரெடிட் கார்ட் #ஐ நம்பிக் கொடுக்க முடியாது. வேற வழியிலே
பணம் பட்டுவாடாக்குக் கேட்டுப்பாருங்க.

said...

கார்த்திக்,

//இந்த படத்தை எல்லாம் தனியா பாக்க முடியுமா....//

டேஞ்சர் சிக்னல் வருது. உடனே அம்மாவின் போன் நம்பரை அனுப்பி வைக்கவும்.

said...

(அட முருகா) சிவமுருகா,

அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சி!!!!

நல்லா இருப்பா. நல்லா இரு.