Wednesday, March 27, 2024

தீபத்திருநாள் !

திரும்பிப்பார்த்தால் கார்த்திகை தீபம்..... இதோ நான் வந்துட்டேங்குது.... அதுக்குள்ளேயா ? 
"பின்னே.... நீ பாட்டுக்குத் தீபாவளிகளைக் கொண்டாடிக்கிட்டு இருந்தால் அது முடியும்வரை நான் காத்திருக்கணுமா ? "

"சொல்றது சரிதான்.... இந்த வருஷம் தீபலக்ஷ்மிகள் வேற வந்துருக்காங்க...... கொண்டாடினால் ஆச்சு !"
முக்கியமா தீபம் ஏத்தணும்!  ஏத்தியாச் :-) 












சம்ப்ரதாயமா செய்றதெல்லாம் இங்கே முடியலை...... தெரிஞ்சவரை செய்யறதுதான்.... அதுவுமே  இந்தியப் பண்டிகைகளைக் கொண்டாடும்  வகையில்  நம்ம குடும்பச்சங்கிலியில்  கடைசியில் நிக்கறது நாந்தான்...... விடக்கூடாது !

என்ன ஒரு சோகமுன்னா.......   இந்த கலாட்டாவில் நம்ம தோட்டத்துலே இருக்கும் கன்ஸர்வேட்டரியை எட்டிப்பார்க்கலை..... பதிமூணு வருஷமாக் காத்திருந்த கள்ளியில் அன்றைக்கு மொட்டு வந்துருச்சேன்னு கொண்டாடிட்டு, தினமும் ஒரு பார்வை பார்க்காமல் போனது என் தப்புதான்.


முந்தாநாள் பூத்துருக்கு ! இதன் வாழ்வு 24 மணி நேரந்தான் என்றபடியால் வாடி நிற்கும் பூவைப் பார்த்துக்  கண்ணில் ஜலம் வச்சுண்டேன்.............. ப்ச்...
ஆனால் ஒரு அல்ப சந்தோஷம்.... நான் யூகிச்சதுபோல பூவின் நிறம் வெள்ளை !


6 comments:

  1. படங்களின் மூலம் அழகிய தீப ஒளி வரிசைகளை கண்டேன். குழந்தை நமஸ்கரிப்பது அழகு. கவனிப்பாரின்றி போன கள்ளிப்பூ!

    ReplyDelete
  2. கார்த்திகை கொண்டாட்டங்கள் நன்று.

    வாடிய பூ - வருத்தம் தான். ஆனாலும் வாடித்தானே ஆக வேண்டும்! நிலையாக இருக்க முடியாதே!

    கொண்டாட்டங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  3. தீப லஷ்மிகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம் கண்ணைக் கவர்கிறது.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம்,

    விளக்கே, ஒரு அழகுதான் இல்லே !!!!

    குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான் !

    கள்ளிப்பூ...... ப்ச்.... ஆனால் எப்படி இருந்துருக்குமுன்னு லேசா ஒரு எண்ணம் இருக்கு ! நம்ம பெரிய தொட்டிக் கள்ளிப்பூவும் வெள்ளை நிறம்தான்!

    ReplyDelete
  5. வாங்க வெங்கட் நாகராஜ்,

    நமக்குத்தான் எத்தனைவிதமான பண்டிகைகள் !!!!!

    கள்ளி வாடியதுகூட பிரச்சனை இல்லை. ஆனால் கண்ணில் காட்டிட்டு வாடி இருக்கலாம்! ப்ச்....

    அடுத்த மொட்டு வரும்போது 'விழித்து' இருக்கணும் !

    ReplyDelete
  6. வாங்க மாதேவி,

    ரசித்தமைக்கு நன்றிப்பா !

    ReplyDelete