மூலவர்சிங்கப்பூருக்கு வியாபாரம் செய்யும் நிமித்தமாக வந்த நகரத்தார்கள், ஒரு சாதாரண வேல் ரூபத்தில் முருகனைக் கும்பிட்டு அந்த வேலை ஒரு அரசமரத்தடியில் நட்டு வச்சாங்க. (பொதுவா இந்த அரசமரத்தடி அண்ணனின் இடம்தானே? அதை தம்பி எப்படி புடிச்சார் பாருங்க! )இந்த மரத்துக்குப் பக்கத்துலே ஒரு குளம் இருக்கு. அதுலே நல்லதண்ணீர் ஊற்று இருந்துருக்கும் போல. அதுலே தினமும் காலையில் மூழ்கி எழுந்து அரசமரத்தடியில் இருக்கும் வேலவனை வணங்கி நாளை ஆரம்பிப்பது ஒரு பழக்கமாக ஆகி இருக்கு. பிற்காலத்தில் டேங்க் ரோடை அரசு விரிவுபடுத்தும்போது அந்த அரசமரத்தை எடுத்துட்டாங்க.
முருகனுக்கு ஒரு கோவிலைக் கட்டிடலாமேன்னு அப்பத்தான் தோணுச்சு. நகரத்தார்களே தமக்குள் நிதி திரட்டி டேங்க் ரோடுலே அந்தக் காலத்துலே கொழிச்சுக்கிட்டு இருந்த ஒரு டாக்டர் (இவர்தான் இங்கத்து முதல் சர்ஜன்)வச்சுருந்த நிலத்தை விலை பேசி வாங்குனாங்க. கோவில் கட்டி முடியும்வரை சிவன் கோவில், மாரியம்மன் கோவிலுன்னு போய் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.
1859லே கட்டுன முதல் கோவில் சின்ன அளவுலேதான் இருந்துருக்கு. ஊர்லே இருக்கும் செட்டியார்கள் வீடுபோலவே வாசலில் பெரிய திண்ணைகள் வச்சு உள்ளே கடந்துபோனால் அர்த்த மண்டபம், கருவறைன்னு சிம்பிளா முடிச்சுட்டாங்க. முருகனும் சிலா ரூபமா வந்துட்டார். கருவறைக்குப் பக்கத்துலே இருக்கும் பெரிய முற்றத்துக்கு நாலுபக்கமும் ஓடுவேய்ஞ்ச தாழ்வாரம் போட்டு வீடுகளில் பொதுவா ரெண்டாங்கட்டு மூணாங்கட்டு சொல்றது போல இதுக்குக் கார்த்திகைக் கட்டுன்னு பெயர் வச்சு அங்கே நடுவில் கோவில் விசேஷ நாட்களில் அன்னதானம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.
(படத்துக்குக் காப்பிரைட் இருக்கு. ஒரு நாலு நாளைக்கு விட்டுவச்சுட்டு எடுத்துருவேன். அனுமதி கேட்டு கோவிலுக்கு அனுப்பிய மெயிலுக்கு இன்னும் பதில் வரலை)12 வருசத்துக்கு ஒரு முறை கோவிலை மராமத்து செஞ்சு குடமுழுக்குன்னு 122 வருசம் ஓடுனபிறகுதான்(1981) கார்த்திகைக் கட்டை இடிச்சுட்டுக் கல்யாண ஹால் ஒன்னு கட்டுனாங்க. ஹாலில் கீழ் தளத்தில் அன்னதானமும் மேல்தளத்தில் கல்யாணங்கள் நடத்த வசதியும் உண்டாக்குனாங்க. (இப்ப அட்டகாசமான கமர்ஸியல் கிச்சன் இருக்கு!)
75 அடி உசரமுள்ள ராஜகோபுரம், கோவில் பணியாட்கள் தங்கும் விடுதிகள் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்திக் கோவிலுக்குள்ளேயும் நல்ல மாடர்னா அழகுத்தூண்கள், சிற்பங்கள் இப்படி வடிவமைச்சுட்டாங்க.
இதை க்ளிக்கி நீங்களும் சுத்திப் பாருங்க.
சுத்தம் செய்யும் வேலைகள் நடக்குதோன்னு ..... அங்கங்கே கொஞ்சம் சாமான்கள் கிடக்குது.
தொடரும்............:-)
கோவில் எவ்வளவு சுத்தமாய் இருக்கு!
ReplyDeleteநம்ம ஊர் கோவில்களில், அதுவும் அதன் தூண்களில் பிரசாதம் சாப்பிட்டு கை துடைப்பது போல நல்ல வேளை யாரும் இங்கே செய்வதில்லை....
நல்ல கோவில், அதுவும் மிகவும் பழமையான கோவில் பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி டீச்சர்...
தை பூசத்தில் பார்த்தது,திரும்ப ஒரு விசிட் அடிக்கணும்.
ReplyDeleteநண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
நீங்க எடுத்திருக்கிற படங்கள் மிளிர்கின்றன.
ReplyDeleteவெத்தலை பாக்குத் தட்டு ஜூப்பரு. முன்பெல்லாம் கல்யாண வீடுகள்லயும் இப்படியொரு தாம்பூலத் தட்டு வலம் வரும். வேணுங்கறவங்க எடுத்துப்பாங்க.. இப்போ அது பீடா ஸ்டால் ஆகிடுச்சு.
ReplyDeleteகோவிலின் சுத்தத்தைப் பார்க்கறச்சே ஏக்கமா இருக்கு. நம்மூரு எப்போ அப்படி ஆகும்(மக்கள் திருந்தறச்சேன்னு உங்க பதில் இப்பவே எனக்கு கேட்டுடுச்சு:-))
முருகா முருகா முருகா
ReplyDeleteசிங்கை முருகா! உன் திருக்காட்சி நானும் கண்டேன். இனியும் காண்பேன். அருள் முருகா.
படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு டீச்சர். கோயில்னா இப்பிடி இருக்கனும்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட மருமகள் இந்தக் கோயில்ல பரதநாட்டியம் ஆடியிருக்காங்க.
அப்படியே டீச்சர் ஒரு சின்ன விளம்பரம். புது வீடு தொறந்திருக்கேன். நீங்களும் அடிக்கடி வாங்க :) ரீடர்ல போட்டு வெச்சிக்கோங்க.
http://gragavanblog.wordpress.com/
படங்கள் மிக அழகு. அந்த கதவு எவ்வளவு பெரியதாக இருக்கு? அருமை.
ReplyDeleteபக்தர்களுக்கு விநியோகிக்க வெத்தலை, பாக்கு, பழம் அடுக்கி வச்சுருப்பதே ஒரு அழகுதான்.
ReplyDeleteஅழ்கான பகிர்வுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteநம்மாட்கள்தானே இங்கும்! அதெப்படி சுத்தமா வச்சுக்க முடியுது!!!! இந்தியாவுக்கு வரும்போதும் இதே பழக்கமா இருந்தால் எவ்ளோ நல்லது!
ஒருவேளை ஊரோடு ஒட்டி வாழணுமோ:-))))
வாங்க இளையதாசன்.
ReplyDeleteபுதுவருகை & முதல்வருகைக்கு நன்றி.
படிச்சுட்டு பொன் ஓட்டை போடறேன். இப்போ ஒருவாரத்துக்கு ........ மூச் விட நேரமில்லை!
வாங்க குமார்.
ReplyDeleteஅங்கே எப்படி மிளிர்கிறதோ அது அப்படியே படத்தில் வந்துருது.
புதுக்கெமெரா ஒன்னு வாங்கிப் பரிசோதனையில் இருக்கு இந்த நிமிசம்:-)))))
வாங்க அமைதிச்சாரல்.
ReplyDeleteபீடா ஸ்டாலில் ஏகப்பட்ட கிண்ணங்களில் கலர்க்கலரா என்னென்னவோ சாமாச்சாரங்கள்.
எதுக்கு வம்புன்னு எட்டிப்பார்ப்பதோடு சரி!
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கவே முடியாதாம்.
கையில் சாட்டை எடுக்கணுமோ என்னவோ..... இதுக்கெல்லாம் கூடவா ஜனநாயகம்?
வாங்க ராகவன்.
ReplyDeleteமுருகன்னு சொன்னதும் ஆன்மீக்கச்செம்மல் வருகை!!!! பேஷ் பேஷ்.
நேத்துப்பொறந்தமாதிரி நினைவு. அதுக்குள்ளே ஆடும் அளவுக்கு வந்தாச்சா மருமாள்!!!! பொண் வளர்த்தி......பீர்க்கங்காய் வளர்த்தி என்பது சரிதான்!
ஆமாம்...கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பு அன்புப்பறதில்லையா? வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் விரைவில். எத்தனை பதிவு போட்டுருக்கீங்க?
வாங்க ராம்வி.
ReplyDeleteஅதுக்குப் பக்கத்துலே நிக்கும்போது நாம் எவ்ளோ சின்னவங்களா ஆகிடறோம் பாருங்க! இதுக்குத்தான் கோவில்கதவுகள் பெருசா வைக்கிறாங்க போல!
வாங்க இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஎவ்ளோ சிரத்தையாச் செஞ்சு அடுக்கி வச்சுருக்காங்கன்னு பார்த்து வியப்புதான் எனக்கும்!
வருகைக்கு நன்றிங்க.
// பொண் வளர்த்தி......பீர்க்கங்காய் வளர்த்தி என்பது சரிதான்! //
ReplyDeleteஆமா டீச்சர். நேரம் நெகுநெகுன்னு வளருது. காலம் கடகடன்னு ஓடுது. :)
// ஆமாம்...கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பு அன்புப்பறதில்லையா? வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் விரைவில். எத்தனை பதிவு போட்டுருக்கீங்க? //
இன்னையோட சேத்து அஞ்சு பதிவுகள். வாரத்துக்கு ஒன்னாச்சும் போட்டுறலாம்னுதான் இருக்கேன். :)
பழைய படம் காணக் கிடைக்காத காட்சி.
ReplyDeleteசிலைகள் தகதகக்கின்றன. வெள்ளைப் பிள்ளையாரும் வணக்கம் கூறுகிறார்.
வாங்க மாதேவி.
ReplyDeleteஎல்லாப்புகழும் புள்ளையாருக்கே!!!!!!