நம்ம சொந்தப் பட்டிமன்ற நடுவர் தீர்ப்பு சொன்னார். எல்லாம் நாந்தேன்:-) பாட்டுமன்றத் தீர்ப்பைக் கேட்டுட்டுக் கிளம்பிடலாம். பந்திக்கு இருக்கவேண்டாம். சாப்பாடு நமக்கு நம்ம வீட்டுலே. இப்போ பிரதீபை மட்டும் வெளியே போய் சாப்பிட்டு வரச் சொல்லலாம். பேஷ் பேஷ்!சரியான தீர்ப்பு !!
திடீருன்னு உறுமிச்சத்தம் கேக்குது. கூடவே நாயனமும் தவிலும். ஜல்ஜல்ன்னு சலங்கை ஒலிக்கத் தலையில் கரகம் ஏந்தி ஆடிவந்து மேடை ஏறுனாங்க ஒரு பெண்மணி.
உசரமான கம்புலே ஏறிக் கட்டைக் காலில் நடந்துவரும் ஸ்டில்ட் வாக்கர்ஸ் ரெண்டு பேர் வந்து மேடைக்கு முன்பக்கம் தரையில் நின்னு இசைக்கு ஏற்ப ஆடிட்டுப் போனாங்க.
மேடையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருக்கும்போதே பாட்டில் தண்ணீர் டீ காஃபின்னு வரிசையா உபசரிப்புகள்தான் பார்வையாளர்களுக்கு.. எல்லாம் சிகப்பு சேலை உடுத்திய ஆதிபராசக்தி பக்தைகள். எனக்கு ஆதிபராசக்தி சந்நிதி பார்த்தவுடன் நம்ம நானானி நினைவு வந்து மனசுக்குள்ளே மணை போட்டுச்சு. அவுங்க இங்கே இருந்துருந்தா பூரிச்சுப்போய் இருப்பாங்க, இல்லே நானானி?
நல்ல சிநேகமான சனங்க. . இங்கே வந்தவுடன் காலனியைச்சும்மா சுத்திப்பார்த்தபோது, மக்கள்ஸ் அனைவரும் அன்போடு வீட்டுக்குள்ளே வாங்க வாங்கன்னு ஆசையாக் கூப்புட்டாங்க. சாயா குடிங்கன்னு ஏகப்பட்ட உபசாரம். வீட்டுக்குள்ளே வேணுமுன்னா போதுமான இடம் இல்லையே தவிர மக்கள் மனசு ரொம்பவே விசாலமா இருக்கு.
மேடையில் மாலை மரியாதைகள் தொடங்குச்சு. ஐயோ...மணி பத்தரை ஆகுது சீக்கிரம் முடிங்கப்பா...... பாட்டுமன்ற இருதயராணிக்கு மரியாதை செலுத்தி மாலை அணிவிக்க, திடீர்னு மைக்கில் நியூஸிலாந்து எழுத்தாளரை மேடைக்குக் கூப்பிடறாங்க. மாலை அணிவிச்சு (அதே சாமந்திப்பூ மாலைதான்) இளமஞ்சள் பொன்னாடை போர்த்தினேன். நல்லாப் பாடினீங்கன்னு கைகுலுக்கிப் பாராட்டினேன். சட்னு ராணி காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டாங்க. அப்படியே நடுங்கிப் போயிட்டேன். படா பேஜாராப் போயிருச்சு எனக்கு:( காலிலே விழும் கலாச்சாரத்தை முற்றிலும் வெறுப்பவள் நான்.
ஒருவழியாப் பாட்டுமன்றத் தீர்ப்பு சொன்னார் நடுவர். ரெண்டு வாதிகளுமே ஜெயிச்சுட்டாங்க. பழைய பாடல் புதியபாடல் ரெண்டுமே நல்லா இருக்குன்னார். ஆமாம்...... கட்டிக்காத்தல் வெட்டிச் சாய்த்தல் என்ற தலைப்பை இப்படி வெட்டிச்சாய்ச்சுட்டாரே...............அட ராமா...............
தயாரிச்சுக் கொண்டுவந்த பாடல்கள் பலதையும் இன்னும் பாடி முடிக்கலை நேரம் இல்லாமல் போச்சுன்ற புலம்பலுக்கு....... நாளை பாரதி பவன் (சண்டிகர் தமிழ்ச்சங்கம்) கொண்டாட்டத்துலே முதல் ஐட்டமே பாட்டுமன்றம்தான். ரெண்டு மணி நேரம் உங்களுக்கே உங்களுக்குன்னு ராஜசேகர் உத்திரவாதம் கொடுத்தார்.
மறுநாள் சந்திக்கலாமுன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். பாதுகாப்புக்கு வந்த சண்டிகர் நகரக் காவலர்கள் ஓரமா ஒரு பக்கம் நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. விழாவுக்கு ஆர்மி கர்னல் (தமிழர்) குடும்பத்தோடு வந்துருந்தார்.
மறுநாள் பகல் ரெண்டரைக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பம். நாலரைக்குப்போய்ச் சேர்ந்தோம். நல்ல கூட்டம். மேடையில் பாட்டுமன்றம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு பத்து நிமிச நேரத்துலே மத்திய அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பந்தா ஒன்னும் காட்டாம சிம்பிளாத் தன்னுடைய பி.ஏ.வுடன் அரங்கத்துக்குள்ளில் நுழைஞ்சார். அவரை வரவேற்று மேடைக்கு அழைச்சதும் போய் அங்கே போட்டுருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். ஆஹா..... தமிழ்நாட்டுலே விஐபிக்களுக்குப் போடும் சிம்மாசனமோ அலங்கார நாற்காலிகளோ ஒன்னுமே இங்கே இல்லை. ரொம்ப எளிமையான மனிதர். அடிப்பொடிகள், அடியாட்கள், கருப்பு வெளுப்பு பூனை, நாய் படை, பாதுகாப்பு ஒன்னுமே இல்லாம வந்தவரைப் பார்த்து எனக்கே ஐயோன்னு ஆகிருச்சு. விட்டுருந்தா பேசாம நானே கொஞ்ச நேரத்துக்கு அடியாளா நின்னுருப்பேன்.
வேற அலுவல்கள் இருப்பதால் பத்து நிமிசம் மட்டுமே இருக்கமுடியும் என்று அமைச்சர் சொன்னதால்...... நாம் வரும்போது நடந்துக்கிட்டு இருந்த பாட்டுமன்றத்தை ஓரம் கட்டிட்டு கரகம், மயிலாட்டம், மாடாட்டம். எல்லாம் சட் சட்னுவந்து அவருக்கு முன்னால் ஆடிக் காமிச்சாங்க.
மாடு
கரகம் ஸ்பெஷலிஸ்ட் பழனியம்மாள், தரையில் இருந்து ஊசி எடுத்தல், கண்ணைக் கட்டிக்கிட்டு ஒருத்தர் தலையில் வச்சுருந்த தேங்காய் உடைத்தல், காவடி ஆட்டம் இப்படி விதவிதமா ஆடி மகிழ்விச்சாங்க. மஞ்சள் புடவை பவுனுத்தாயி சப்போர்டிங் பெர்ஸன்தான்.
காவடி
இன்றைய நிகழ்ச்சிக்கு செலவை ஈடு கட்ட அவரவருக்கு விருப்பமான தொகையைக் கொடுத்து உதவணுமுன்னு தமிழ்ச்சங்கச் செயலாளர் ராஜசேகர் வேண்டுகோள் வச்சார். ஆயிரம் பேருக்கு இன்னிக்கு இரவு சித்திராப் பவுர்ணமி நிலா விருந்துக்கு ஏற்பாடு ஆகி இருக்குன்னார். நாமும் ஒரு தொகை நம்ம வகையில் கொடுத்தோம். நிதி இருந்தால்தானே சங்க நிகழ்ச்சிகளை நடத்த முடியும். இல்லீங்களா? ஊர் கூடித்தானே தேர் இழுக்கணும்?
பாட்டுமன்றம் முடிஞ்சதும் கவிதை அரங்கம் இருக்காம். கவிஞர் பொற்கைப் பாண்டியன், நேதாஜி சுவாமிநாதன், அர்ஜுனன், மணிகண்டன், கார்த்திக், அடைக்கலம் என்று ஒரு குழுவினர் வந்துருக்காங்க. நமக்கோ .................. பொறுமை கிடையாது. ஆறாச்சேன்னு கிளம்பி வெளியில் வந்தால் வண்டி டயர் பஞ்சர். சரி செய்யச் சொல்லிட்டு அங்கே வாசலில் நின்னுக்கிட்டு இருந்த 'கட்டைக் காலருடன் ' பேசிக்கிட்டு இருந்தேன்.
இவர் பெயர் மணிகண்டன். தமிழ்நாடு கிராமியக் கலைப் பண்பாட்டுக்கழக உறுப்பினர். இவர் சிலம்பக்காரர். தொழிலே சிலம்பம் சொல்லிக் கொடுப்பதுதானாம். இவருடைய தாத்தா, அப்பா எல்லாம் மல்யுத்த மாஸ்டர்களாம். இவர்தான் சிலம்பத்துக்கு வந்துட்டார். (உடம்பு மல்யுத்தத்துக்கு ஏத்தமாதிரி மாமிச மலையா இல்லையே)
சண்டிகர் வந்ததும் நேத்து ரோப்பார் என்னும் இடத்தில் நடந்த ஹாக்கி டோர்னமெண்ட்டுக்கு கட்டைக்கால் குழுவினர் போய் நிகழ்ச்சி நடத்தி விளையாட்டு வீரர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்திட்டு வந்தோமுன்னார். கலை நிகழ்ச்சிகள் எதாவது நடத்தணுமுன்னா இவருடை குழுவினர் வந்து நடத்திக் கொடுப்பாங்கன்னு சொல்லி செல் நம்பரைக் கொடுத்தார்.
வரப்போகன்னு ஆறுநாள் ரயிலுக்கே ஆயிருச்சாம். முப்பது பேருக்கு விமானமுன்னா செலவு இன்னும் ரொம்பவே கூடிப்போகும். அவ்வளவுக்கு நம்ம தமிழ்ச்சங்கம் தாங்காதுங்களே:(
வண்டி வந்ததும் கிளம்பி வீட்டு வந்துட்டோம். நிலாச்சாப்பாடு நம்ம மாடி முற்றத்தில்னு ஒரு கணக்குப் போட்டு வச்சேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க கருமேகக் கூட்டத்துலே இருந்து நிலா வெளியில் வரவே இல்லை:( நம்மைப் பார்க்க அதுக்குக் கொடுத்து வைக்கலைன்னுட்டு வீட்டுக்குள் ரசவிருந்தை ஆரம்பிச்சுத் 'தொட்டுக்க' டிவி போட்டா..... 'விஜய் டிவி நீயா நானா'வில் ஒரு பக்கம் டவுனுக்காரர்களும் இன்னொருபக்கம் நாட்டுப்புறக் கலைஞர்களுமா உக்காந்துருக்காங்க! நமக்குன்னு (ஜோரா) அனுபவங்கள் வாய்க்குது பாருங்களேன்!
PIN குறிப்பு: இந்த மூன்று பகுதிகளிலும் வெளிவந்த படங்கள் ரொம்பவே சுமார் ரகம்.அதற்காக ட்ரெய்னி ஃபோட்டோக்ராஃபர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறேன்'.
PIN குறிப்பு: இந்த மூன்று பகுதிகளிலும் வெளிவந்த படங்கள் ரொம்பவே சுமார் ரகம்.அதற்காக ட்ரெய்னி ஃபோட்டோக்ராஃபர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறேன்'.//
ReplyDeleteநமக்கு இது கூட வராதே! அநுபவம் புதுமை! ஹிஹிஹி, தினம் வந்து பின்னூட்ட முடியறதில்லை! இதைக் கணக்கிலே வச்சுக்குங்க ஒரு பத்து பதிவுக்கு.
ஆஹா, சுண்டல், வடை எல்லாமும் எனக்கே எனக்கா??
ReplyDeleteநேரில் இருந்து நிகழ்ச்சிகளை பார்த்த மாதிரி நாங்க உணரும் படியாக படங்களும் நிகழ்ச்சி தொகுப்பும் அமைந்து உள்ளது. சூப்பர்!
ReplyDeleteதமிழ்நாட்டு கலாச்சாரம் வடமண்ணில் ஜொலிக்கிறதைப்பார்க்கறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ReplyDeleteகரகம் ரொம்ப அழகா இந்த புடவைக்கட்டுல அற்புதமா இருக்கு.. அவங்க செய்யறதெல்லாம் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்க்கும் ஆச்சரியமான விசயம் தான் .. கண்ணால் ஊசியும் , சேலைக்கட்டறதும்..:)
ReplyDeleteசாதா கேமிராவா இருந்தா யாரு எடுத்தாலும் ஒரே மாதிரி நல்லா வரும். நீங்க வர வர நல்ல கேமிராவா வாங்கிடறீங்க போல..:)
ReplyDeleteகரகம், மாடு, மயில் ஆட்டங்கள் வித்தியாசமாக இருக்கிறது.
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பதிவு.
ReplyDeleteஉங்களுக்கும் கோபால் சாருக்கும் நல்ல வரவேற்பு. எங்களுக்கு நல்ல மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் அம்மா.
அன்பு துளசி, இப்பதான் படிக்க முடிந்தது.
ReplyDeleteபோட்டோவும் பதிவுரையும் ஜோர் பா.
ரொம்ப அழகா வந்திருக்காங்க நூசி பதிவர்..
கற்றாருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
சண்டிகர் தமிழ்ச் சங்கத்துக்கும் திரு ராஜசேகருக்கும்,அதைத் தெரியப் படுத்திய உங்களுக்கும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் நன்றி.
வாங்க கீதா.
ReplyDeleteஎல்லாமே அநுபவம் புதுமைதான்:-))))
சுண்டல் வடை மட்டுமில்லை கேஸரியும் உங்களுக்கேதான்!
ரைஸ் குக்கரில் செஞ்சு பார்த்தேன்:-)
வாங்க சித்ரா.
ReplyDelete'நான் பெற்ற இன்பம்' வகைகளில் இவை வருதுப்பா:-)))))
வாங்க அமைதிச்சாரல்.
ReplyDeleteகலாச்சாரம் ஜொலிக்குதா???? உங்க வாய்க்குச் சக்கரை போடணும். நிகழ்ச்ச்சி முடிஞ்ச மறுநாள் ரெண்டு குழுவுக்கு பயங்கரச் சண்டை. நம்ம ராஜசேகர் மட்டும் இல்லைன்னா ஒரு கொலை விழுந்துருக்கும்:(
வாங்க கயலு.
ReplyDeleteஎனக்கு அந்தப் பின்கொசுவம் கட்டுவது ரொம்பப் பிடிக்கும். பார்டர் எல்லாம் எப்படிப் பளிச்சுன்னு வரும் இல்லே?
புதுக்கெமெராவுக்கு அடிக்கல் நாட்டியிருக்கேன். PIT மாணவிக்கு படிப்புக்கேத்தமாதிரி வாங்கித்தரணும் இல்லே?:-))))
வாங்க மாதேவி.
ReplyDeleteமாடுகள் எனக்கும் புதுசுதான்:-)
வாங்க ரத்னவேல்.
ReplyDeleteஎதிர்பாராமல் கிடைச்ச வரவேற்புக்கு பயங்கர மகிழ்ச்சிதான்!!!!!
வாங்க வல்லி.
ReplyDeleteஆஹா...... இது வேறுவிதமா இருக்கணும்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை(யாம்):-)))))
// நிகழ்ச்ச்சி முடிஞ்ச மறுநாள் ரெண்டு குழுவுக்கு பயங்கரச் சண்டை//
ReplyDeleteச்சே.. இந்தக்கலாச்சாரத்தையும் அங்கே கொண்டுபோயிருக்காங்களா, தமிழன் பேரைக்கெடுக்கறதுக்குன்னே :-(