'விவரம்' அறியாச் சிறுமி. அங்கே இருந்த ஒரு நாணல் பெட்டி(??)யில் குழந்தையை வச்சு, தன்னுடைய கைவளை, கழுத்துலே இருந்த சில ஆபரணங்களையெல்லாம் கழட்டி அதே பெட்டியில் வச்சு ( என்ன விவரம் பாருங்க. காசு இருந்தால் குழந்தை வளர்ந்துருமுன்னு அப்பவே இருந்துருக்கு) ஓடும்நதியில் பொட்டியை மிதக்க விட்டுடறாள்.
ரதம் ஒன்னை ஓட்டிக்கிட்டே வரும் சாரதிக்கு தாங்கமுடியாத தாகம். நதியைப் பார்த்ததும் ரதத்தை நிறுத்தி, கீழே இறங்கிக் குதிரைகளைச் சமாதானப்படுத்திட்டு, ஆத்துலே இறங்கித் தண்ணீரை அள்ளிக்குடிக்கிறார். கண் முன்னால் பெட்டி மிதந்து வந்துக்கிட்டு இருக்கு. தண்ணீர் வேகத்துலே அடிச்சுக்கிட்டுப் போகும் பெட்டியைப் பக்கத்துலே இருக்கும் நாணல் புதர்களை ஒரு கையால் பிடிச்சுக்கிட்டு, மறுகையால் இழுக்கறார். திறந்து பார்த்தால் அட! அழகான ஆண் குழந்தை! வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் மனைவியிடம் கொடுத்து வளர்க்கிறார். பச்சப்புள்ளெ யாருன்னு புரிஞ்சுருக்குமே...... கர்ணன்.
இதை வேறமாதிரி படிச்ச நினைவு. பாண்டவர்களும் துரியோதனாதிகளும் சின்னவயசா இருக்கும்போது , இதுவரை கற்ற கலையில் அவுங்கவுங்களுக்கு உள்ளத் திறமைகளைக் காட்டும் போட்டி நடக்குது. பாண்டவர்கள், அந்த நூறுபேரைவிடத் திறமைசாலிகளா இருந்து எல்லாப் போட்டிகளிலும் ஜெயிச்சுக்கிட்டே இருக்காங்க. துரியோதனனுக்கு எரிச்சலா இருக்கு. அப்ப அர்ஜுனன், தன்னை யாராலும் வெல்ல முடியாதுன்னு சவால் விடறான். அர்ஜுனன் செஞ்சதையெல்லாம் என்னாலும் செஞ்சு காமிக்க முடியுமுன்னு சொல்லும் கர்ணனிடம், சமமான தகுதி (குலம் அந்தஸ்து) இருந்தால்தான் உன்னை அனுமதிக்க முடியும். உன் பெற்றோர், குலம் இதெல்லாம் சொல்லுன்னதும்........................ மனசு உடைஞ்சு போறான். வெறும் தேரோட்டும் வேலைக்காரனின் மகன் , அரசகுலத்தோருடன் போட்டிப்போடுவதா?
க்ஷத்திரியர்களை வெறுக்கும் பரசுராமரிடம், வில்வித்தைகளையும், இன்னும் சிறப்பாச் செயல்படும் அஸ்திரங்களையும் ( ஹையர் ஸ்டடீஸ்) கத்துக்கப்போன கர்ணன், தான் அரசன் என்பதைச் சொல்லாமல் அந்தணர்குலமுன்னு சொல்லி வித்தையெல்லாம் கத்துக்கிட்டான். பிரம்மாஸ்த்திரம்கூடச் சொல்லிக் கொடுத்துட்டார் பரசுராமர். ஒருநாள் குருவுக்குத் தூக்கம் வருது. சீடன் தொடையில் தலைவச்சுத் தூங்கறார். அப்போ ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் துளைக்குது. உடம்பு அசைஞ்சால் குரு முழிச்சுக்குவாறேன்னு அமைதியா அந்த வலியைப் பொறுத்துக்கிட்டு உக்கார்ந்துருக்கான். வண்டு பாட்டுக்குத் தன்வேலையைக் காமிக்குது. ரத்தவெள்ளம். ஈரப் பிசுபிசுப்பு தன் உடலில் பட்டதும் குரு கண்ணை முழிச்சுட்டார். தரை பூராவும் ரத்தம்.
(அரசுச் சலுகைக்காகப் பொய் சர்ட்டிஃபிகேட் கொடுத்து கல்லூரியில் சேரும் ஆட்கள் நினைவு வருது)
" மன்னிக்கணும், குருவே.. வித்தைப் பயிலும் ஆர்வத்தில் உண்மையை மறைச்சுட்டேன்"
" அடப்பாவி..... நம்பிக்கை துரோகி ( டபுள் செக் பண்ணாம நீ சொன்னதை நம்புனதுக்கு என்னை.......) அதான், எல்லாத்தையும் கத்துக்கிட்டோமே. இனி உண்மை தெரிஞ்சு என்ன பயன்னு அசால்ட்டாவா இருக்கே? பொய் சொல்லி நீ கற்ற அந்த பிரமாஸ்த்திரம், உனக்குத் தேவைப்படும் சமயத்தில் உதவாமல் போகட்டும். அந்த மந்திரத்தை நீ என்னதான் முயன்றாலும் அப்போ நினைவுக்கு வராது. பிடி சாபம்"
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் நடக்கப்போவது உறுதியானதும், இந்திரன் தன்னுடைய மகன் அர்ஜுனனுக்குக் கர்ணனால் ஆபத்து வருமுன்னு யூகிச்சு, தானம் கேட்க வந்த யாசகன் உருவில் 'கர்ணனுடைய கவசகுண்டலத்தைத் தானமாக் கேட்கறான். அப்போ சூர்யா, 'தானம் கேக்க வந்தவன், இந்திரன்னு சொல்லியும்கூடக் கேட்கும் தானத்தை மறுக்காமல் வழங்கும் (கொடையில் கர்ணன்) குணமுள்ளதால், தன்னுடலோடு ஒட்டிப்பிறந்தக் கவசகுண்டலத்தை அறுத்துக் கொடுக்கறான்.
தன்னலமான இருக்கும் தன் நடவடிக்கையால் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்து இந்திரனுக்கு. கர்ணனைப் பாராட்டி ஒரு சக்தி ஆயுதம் தரான். ஆனா ஒரு கண்டிஷன். ஒரே ஒருமுறைதான் அதைப் பயன்படுத்த முடியும். அது முடிஞ்சதும் தானே அது இந்திரனிடம் போய்ச் சேர்ந்துருமாம். (கிஃப்ட் வவுச்சர் வித் கண்டிஷன் அப்ளைட்.)
ஒருநாள் சூரியோதயத்தில் நதிக்கரையில் நின்னு சூரியனை வழிபடும் கர்ணனைச் சந்திக்க குந்திதேவி வர்றாங்க. (எல்லாம் ஒரு காரனத்தோடுதான். பாசமெல்லாம் பொத்துக்கிட்டு வரலை) 'நீ என் மகன்தான். என் விளையாட்டுப் புத்தியால் கன்னிப்பொண் கையில் புள்ளையா வந்துட்டே. உலக அபவாதத்துக்கு பயந்து உன்னை ஆத்தோட விட்டுட்டேன். அதுக்கு நீ என்னை மன்னிச்சுரு. இப்பத்தான் உனக்குத் தெரிஞ்சுபோச்சே நாந்தான் உன் அம்மான்னு. பாண்டவர்கள் உன் தம்பிகள். நீ நம்மாத்துக்கு வந்துரு. எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்'னாங்க.
"அதெப்படி முடியும்? ஊருலகமெல்லாம் என்னை அநாதை, தேரோட்டி எடுத்து வளர்த்த பையன்னு இழிவாப் பேசுனபோது எவ்வளவு அவமானப்பட்டுருப்பேன். அப்பெல்லாம் வாயை மூடிக்கிட்டு இருந்துட்டு, இப்போ உன் பிள்ளைகளுக்கு என்னாலே ஆபத்துன்னதும் ஓடி வந்தாயா?
துரியோதனன் மட்டும் அப்போ என்னை அரசனாக்கி இருக்காட்டா.........என் நிலை என்னவா ஆகி இருக்கும்? செய்நன்றி இல்லாதவன் மனுசனா(வே)இருக்கமுடியாது. நான் மனுசன்."
அண்ணந்தம்பின்னு ஆசை காமிச்சு இவனை இழுக்கமுடியாதுன்னு குந்திக்குத் தெரிஞ்சுபோச்சு. சரி, வேற வழியில் இவனை மடக்கலாமுன்னுட்டு, 'நீ உன் தம்பிங்க அஞ்சுபேரையும் போரில் கொல்லக்கூடாது'ன்னாங்க. தம்பியாவே இருந்தாலும் இல்லாட்டாலும்கூட அந்த அஞ்சு பேரில் அர்ஜுனன் தவிர்த்த மற்ற நாலு பேரும் எனக்கு ஒரு பொருட்டே இல்லை . எனக்குச் சமமான பலத்தையுடைய அர்ஜுனன்தான் என் எதிரி. அவனைமட்டும் விடமாட்டேன். எப்படியும் உனக்கு அஞ்சு பிள்ளைங்க இருப்பாங்க. போயிட்டுவான்றான்.
போர் தொடங்குது. கர்ணனைப் பற்றிய முழுவிவரம் அறிந்த பிதாமகர் பீஷ்மர்கூட, அவனுக்குத் தரவேண்டிய மரியாதை, உரிமைகளையெல்லாம் ஒரு பக்கம் தள்ளிவிட்டுட்டு, அவனை அலட்சியமாத்தான் நடத்தறார். உதாசீனம் என்றது என்ன கொடுமை பாருங்க.
பாரதப்போரில் பீஷ்மர் தலைமை வகிச்சநாட்களில் கர்ணன் போரில் கலந்துக்காமல் ஒதுங்கி இருக்கான். பத்தாம்நாள் பீஷ்மர் வீழ்ந்தார். கர்ணன் சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றுப் போரை நடத்தறான். குந்தியின் ஐந்து மக்களும் கர்ணனைத் தாக்குறாங்க. (நல்ல அம்மா. கர்ணனை வஞ்சிச்சு வரம் வாங்குன குந்தி, பாண்டவர்கள்கிட்டேயும் 'அண்ணனைக் கொல்லாதே'ன்னு சொல்லி இருக்கக்கூடாது?)
பரசுராமரின் சாபத்தின் பலனாக, போர்க்களத்தில் அர்ஜுனனோடு சண்டை முற்றிவந்த ஆபத்துகாலத்தில் பிரம்மாஸ்த்திரத்துக்கான மந்திரம் மறந்து போயிருது. (நானா இருந்தால் எழுதிவச்சுருந்துருப்பேன்) பூமியில் அழுந்துனத் தேர்ச்சக்கரத்தை வெளியில் எடுக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் அர்ஜுனன் அம்பெய்து கர்ணனைக் கொன்னுடறான்.
பாடல்கள், சம்பவங்கள் எல்லாம் வியாஸர் எழுதுன மகாபாரதத்தில் இருந்து எடுத்ததுன்னு சொன்னாங்க. ஒளி அமைப்பு பிரமாதம். இதைச் சொல்லாமவிட்டால் அமாவாசையன்னிக்கு நம்ம வீட்டில் லைட் எரியாது.
சூரியன் வரும் இடங்களில் திரை ஒளிர்வதைப் பார்க்கும்போது, கன்யாகுமரியில், கடற்கரையில் நின்னு சூர்யோதயம் பார்க்கிறமாதிரி இருந்துச்சு.
நிகழ்ச்சி முடிஞ்சதும் நடனமணிகளைச் சந்திச்சு 'எட்டு வார்த்தை'களைச் சொல்லிட்டுத்தான் வந்தோம்.
'எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை. அற்புதம்'
என்னத்தைச் சொல்றது? மூன்றாம் முறையா முயல்கிறேன்.
ReplyDelete//(தமிழில் விநீத் ஆடி இருப்பார்) //
மலையாளத்தில் தான் விநீத் ஆடிப் பார்த்த நினைவு, நான் தமிழிலே படத்தையே பார்க்கலை,ரஜினிக்காக எல்லாத்தையும் மாத்தித் தொலைச்சிருப்பாங்களே, அதான்! :)))))))
முதல்லே உங்க பி.க. இருந்துச்சு, அப்புறமா அதைக் காணோம், அப்புறம் பார்த்தா ப்ளாகே இல்லைனுடுச்சு! இது எந்த வகைக் கயமை? புரியலை போங்க,
ReplyDeleteகர்ணன் பேரைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தேன்.
TEST
ReplyDeleteஇந்த வாரம் இதுவரை நம்ம பதிவுகள் தமிழ்மணத்தில் முகப்பில் காமிக்கப்படலை என்பதால் என்ன ஏதுன்னு தெரியாம முழிக்கிறேன்.
பின்னூட்ட விவரமாவது வருதான்னு பார்க்க இந்தப் பின்னூட்டக் கயமை(-:
9/04/2009 3:28 PM
பி'க. செஞ்சும் பயனில்லை என்பதால் ப.க. செஞ்சுருக்கேன்.
ReplyDeleteஅதே பதிவை இப்போ இன்னொருமுறை பப்ளிஷ் செஞ்சுருக்கேன். இதுவாவது தமிழ்மணத்தில் தெரியுதான்னு பார்க்கணும்.
கீதாவின் பின்னூட்டங்களை(!!!) கட் & பேஸ்ட் முறையில் இங்கே கொண்டுவரணும்.
சாரி.............கீதா.
கீதா சாம்பசிவம் has left a new comment on your post "எப்படிச் சொல்வேன்!!! கர்ணா...நீ ரொம்பப் பாவம்டா":
ReplyDelete//(தமிழில் விநீத் ஆடி இருப்பார்) //
மலையாளத்தில் இல்லை விநீத் ஆடிப் பார்த்தேன், நான் தமிழிலே பார்க்கலை, ரஜினிக்காக எல்லாத்தையும் மாத்தித் தொலைச்சிருப்பாங்கனு எரிச்சலில்! :P
நல்லா இருக்கு, பதிவு, இவங்க ஆட்டம் தொலைக்காட்சியிலே பார்க்கிறது உண்டு.(பொதிகையிலே தான், சாயந்திரம் போடுவாங்க, அதிலே எப்போவானும் அபூர்வமா இப்படிப் பிரபலங்களொடது வரும்)
என்னத்தைச் சொல்றது? மூன்றாம் முறையா முயல்கிறேன்.
ReplyDelete//(தமிழில் விநீத் ஆடி இருப்பார்) //
மலையாளத்தில் தான் விநீத் ஆடிப் பார்த்த நினைவு, நான் தமிழிலே படத்தையே பார்க்கலை,ரஜினிக்காக எல்லாத்தையும் மாத்தித் தொலைச்சிருப்பாங்களே, அதான்! :)))))))
கீதா சாம்பசிவம் has left a new comment on your post "எப்படிச் சொல்வேன்!!! கர்ணா...நீ ரொம்பப் பாவம்டா":
ReplyDeleteமுதல்லே உங்க பி.க. இருந்துச்சு, அப்புறமா அதைக் காணோம், அப்புறம் பார்த்தா ப்ளாகே இல்லைனுடுச்சு! இது எந்த வகைக் கயமை? புரியலை போங்க,
கர்ணன் பேரைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தேன்.
வாங்க கீதா.
ReplyDeleteஇன்னிக்கு கண்முழிச்ச நேரம் சரியில்லை எனக்கு.
ரொம்பப் படுத்தல்.
விநீத் ஆடுனது மலையாளத்திலா? தமிழில்ன்னு எனக்கு நினைவு.
மறுபடி ரெண்டையும் போட்டுப் பார்க்கணும்.
அருமையான பதிவுங்க. கர்ணன் என் காதலன். இன்னும் அவன் மீது நிறைய விபரங்கள் உள்ளன.
ReplyDeleteஅருமை... நடனத்தை you tube-பில் பார்கிறேன்.
-வித்யா
விநீத் ஆடினது தமிழ்தான் தமிழ்தான் தமிழ்தான்
ReplyDeleteவாங்க வித்யா.
ReplyDeleteகர்ணன் ஒரு அற்புதமான படைப்புதான் பாரதத்தில்.
உங்களுக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாப் போட்டுருங்க. பலருக்கும் பயனாக இருக்கும்.
வாங்க சின்ன அம்மிணி.
ReplyDeleteஆணித்தரமான தீர்ப்பு!
அப்பாடா...... என் ஐயம் தெளிந்தது.
கீதா, தமிழில் விநீத்.
அப்ப மலையாளத்தில்??????
இதே ஸ்ரீதர்தான்:-))))
மூக்கு உடையலையே? வரேன் அப்புறமா ரெண்டு மூணு பதிவுக்கு அப்புறம்! :)))))) இந்த சினிமாவெல்லாம் ஒழுங்காப் பார்த்தாத் தானே! எங்கே? :P
ReplyDeleteமிகவும் அருமையாக இருந்தது. மிகவும் ரசித்தேன். அதிலும் இடையிடையே நீங்கள் எழுதிய எழுத்து மிகவும் சிறப்பு.
ReplyDelete''நானா இருந்தா எழுதி வைச்சிருப்பேன்'' என்றது மிகவும் அழகு. என்னவொரு பிரச்சினை எழுதி வைச்சதை எங்கே வைச்சோம்னு மறந்து போயிருப்பீங்க. :)
மிக்க நன்றி.
மகாபாரத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன். அந்த படமும் தேடி எப்படியே ஒரு டிவிடி வாங்கிட்டேன்.
ReplyDeleteகர்ணன் கதாபாத்திரத்தை முக்கிய கருவாக வச்சி எடுத்த தளபதி படமும் செம படம். அந்த அளவுக்கு மக்களுக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் ;)
அதுல சிவாஜி+என்டிஆர் எல்லாம் கலக்கியிருப்பாங்க. அந்த காலத்துல எப்படி எல்லாம் ஒன்னாக ஒரே படத்துல நடிச்சியிருக்காங்க.
ஸ்ரீதர் ஏற்கனவே திரு. பாலசந்தர் படத்தில் வருவார்.
நடனம்,நாட்டியம்னு ஒரே கலக்கலா இருக்கு.யாருக்கு தான் கர்ணனை பிடிக்காது...ஆனா அவரோட முடிவு மட்டும் நெருடலா இருக்கு டீச்சர்.
ReplyDeleteகர்ணன் வஞ்சிக்கப்பட்ட வந்தான்.
ReplyDeleteஆனா துரியோதனனோட சேர்ந்து பாஞ்சாலி துகிலுரிதல்தான் கொஞ்சம் மன உறுத்தல்.
ஆனாலும் கர்ணன் கதை படிக்கும்போதெல்லாம் மனம் கலங்கும். ஏன் இது போல நிகழ்ததுன்னு கேட்டுப் பார்த்திருக்கிறேன்.
எல்லாத்துக்கும் ஒரு பதில் உண்டே. முன்வினைப் பயன் என்று, அது கிடைக்கும்!1
அதுக்கும் கதை இருக்கும்.
இந்த ஸ்ரீதர், சுஹாசினியின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஹீரொவாக நடிச்சிருப்பார். பாலச்சந்தர் படங்களில் பார்க்கலாம். தெலுகு நடிகர்னு நினைக்கிறேன்.
அருமையான பதிவு..பூங்கொத்து!
ReplyDelete//நானா இருந்தால் எழுதிவச்சுருந்துருப்பேன்//
ReplyDeleteஎழுதி வெச்சாலும், அந்த நேரத்துல உங்க பிளாக் பாஸ்வேர்டு மறந்து போயிருக்குமே. :p
அதர்மத்துக்கு துணையா நின்னதால எப்படியும் நாம அழிவோம், நமக்கு பிறகு கர்ணன் தான் துரியோதனனுக்கு சரியான தளபதி!னு முடிவு பண்ணி தான் பீஷ்மர் கர்ணனை போர் ஆரம்பத்துல ஒரங்கட்டினார்னு கீதையில வரும். அதுனால பீஷ்மர் நல்லவர், தியாகி. விட்ருங்க அவரை. :))
@கீதா மேடம், மீசைல ஏகப்பட்ட மண் போல :)))
ReplyDeleteகீதா,
ReplyDeleteஅம்பி உங்களை விரட்டிக்கிட்டு வர்றார்.
விடுங்க 'ஜூட்':-)
வாங்க இராதாகிருஷ்ணன்.
ReplyDeleteஉங்க வாய்க்குச் சக்கரை போடணும்.
வீட்டுச்சாவியை எங்கே வச்சேன்னு
கணினியில் குறிப்பு எழுதிவச்சுட்டுப் போனேன்.
ஊரில் இருந்து வந்தபிறகு எந்தத் தலைப்புலே அதை ஸேவ் செஞ்சேன்னு தெரியாமத் தவிச்சது இருக்கு பாருங்க:-)))))
பட்டாணி பாட்டில் னு ஒரு தலைப்பு.
என்னவா இருக்குமுன்னு அதைக் குடைஞ்சா.........பட்டாணி மட்டும்தான் இருந்துச்சு:-)))))
வாங்க கோபி.
ReplyDeleteநானும் கர்ணன் டிவிடி வாங்கிவச்சுருக்கேன். என்னா பாட்டு என்னா பாட்டு.......
கேக்கலாம் கேக்கலாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
தளபதியிலே கர்ணனை, ரவுடி & கட்டப் பஞ்சாயத்துமாதிரிக் கொஞ்சம் ஆகிட்டாங்களேப்பா(-:
வாங்க சிந்து.
ReplyDeleteமுடிவு?
எல்லாம் ஏற்கெனவே திட்டம்போட்டுச் செஞ்ச சதின்னு நமக்குத் தோணுது இல்லை?
இதுதான் இந்த பாத்திரத்தை அமைச்ச கதாசிரியரின் வெற்றி.
வாங்க வல்லி.
ReplyDeleteநூத்துக்கு நூறு சரி.(கடைசி வரி தவிர)
கன்னடக்காரர்.
வாங்க அன்புடன் அருணா.
ReplyDeleteபூங்கொத்துக்கு நன்றிப்பா.
வாசம், ஆளை(யே) தூக்குது:-)
வாங்க அம்பி.
ReplyDelete//அதுனால பீஷ்மர் நல்லவர், தியாகி. விட்ருங்க அவரை. :))//
கர்ணனைப் பத்தித் அறிந்தவர் தானே? கொஞ்சம் சப்போர்டிவா இருந்துருக்கலாம். நல்லவர்ன்னா வாயைத் திறக்காம இருக்கணுமா!!!!!
அம்பியாவது என்னை விரட்டறதாவது? ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம்(பீம்??) வரும்! :D
ReplyDelete//(தமிழில் விநீத் ஆடீருப்பார்)
ReplyDeleteதமிழில் விநீத்தான் ஆடினார்.
கர்ணனைப் பற்றி நல்ல பதிவு.
நாட்டிய பதிவு இப்போதான் பார்க்க முடிஞ்சது. அருமையா எழுதியிருக்கீங்க. நன்றி அம்மா :)
ReplyDeleteஆமாம் கீதா. பூனைக்குக் காலம் வராமலா போயிரும்?
ReplyDeleteஇனிமே கேசரி சாப்பிடும்போது அம்பியை நினைக்கமாட்டீங்கன்னு அறிக்கை விட்டுறலாமா? :-)
வாங்க கோமதி அரசு.
ReplyDelete'கருத்து'க்கு நன்றி. டபுள் செக் பண்ணமாதிரி ஆச்சு:-)
வாங்க கவிநயா.
ReplyDeleteபிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னது ரொம்பப் பிடிச்சிருக்கு:-)
துளசி, கேசரி சாப்பிடும்போது அம்பிக்குக் கொடுக்காமல் சாப்பிடற சந்தோஷம் இருக்கே! அதை அனுபவிச்சுட்டு அம்பியை நினைக்காமல் சாப்பிடறது எப்படி? அதுக்காகவே நினைப்போமே! :))))))))))))))
ReplyDelete