Wednesday, April 30, 2008

அரண்மனையில் ஒரு மர'கதம்'

இன்னிக்கு எல்லாரும் அரண்மனைக்குப் போறோம். மதில்சுவரைக் கடக்கணும். நல்லா உசரமா கோட்டையாட்டம் கட்டி வச்சுருக்காங்க. பின்னே அரண்மனைன்னாச் சும்மாவா?








வரவேற்பு ரொம்பவே பலமா இருக்கு. அடடா..... நமக்குச் சிவப்புக் கம்பளம் எங்கே?




நமக்குப் பத்து பத்.......ஆனால்.....
தாய்களுக்கு இலவசம். அடடா...கேக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. அதானே உள்ளூர்க்காரன் பொழுதண்ணிக்கும் காசு கொடுத்துப் பார்க்கணுமுன்னா நடக்குமா?


ஹூம்.... பெருமூச்சு விடத்தான் முடியுது. மத்த நாடுகள் படிக்க வேண்டிய பாடம் இது.






இந்தக்கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
அரண்மனையின் உள்ளே இருக்கும் மரகதப் புத்தர் கோயிலுக்கு வாங்க.
(முழு விவரம் அடுத்த பதிவில்)




நம்ம கும்மிகள் இதுகளுக்கும் தெரிஞ்சுருச்சு....:-)))

யானைக் கும்மி......கும்மியடி கும்மியடி......







வீரமிருந்தா என்னைக் கடந்து போ......






ஏனிப்படிக் கோவணத்தோடுத் துண்டு கொண்டு வீற்றிருக்கும் ஆண்டி ஆனாய்????????







கொல்லிப்புற வாசலுக்கு இந்த அலங்காரமா? அச்சச்சோ.....

ராஜாராணி 'வீடு' இதுதானாம்.

படங்கள் பிடிச்சிருக்கா?

இன்னொரு விசயம் உங்ககிட்டே கேட்டுக்கவா?

தொழில் நுட்பக் கேள்வி:

படத்தில் 'க்ளிக்' செய்தால் பெருசாத் தெரியுமுன்னு பல இடங்களில் வருதே.

அதுக்கு எப்படிப் படங்களை வலை ஏத்தணும்?

டீச்சருக்கு 'ஹெல்ப் ப்ளீஸ்'

Tuesday, April 29, 2008

முக்குக்கு முக்குக் கோயில்தானா?

நம்மூர்லே முக்குக்கு முக்குப் புள்ளையார் கோவில் இருக்குறதைப்போல இங்கேயும் இருக்குபோல!

அட!....சீக்கீரம் ஓடியாங்க பூசை ஆரம்பிக்கப்போகுது.


கைகால் கழுவிக்குங்க. அண்டாவுக்கு வந்த வாழ்வைப் பாருங்க. அட்டகாசமா இருக்குல்லே?
நாங்க வரிசையா நிக்கிறோம். தெரியாதவங்க திருச்சூர் பூரமுன்னு நினைச்சுக்கப் போறாங்க:-))))
அதோ கடை இருக்கு. ஓடிப்போய் பூசைச் சாமான்கள் வாங்கிக்குங்க பார்க்கலாம்.
ஊதுவத்தி கொளுத்துறவங்க இப்படி வாங்கப்பா.

இளநிக்கெல்லாம் ஸ்ட்ரா போட்டாச்சா? பூசை முடிஞ்சதும் படையலுக்கு வச்ச யானைகளை நியூஸிக்கு யாராவது பேக் பண்ணுனாச் சரி:-)

மேளத்தை மெல்லத்தட்டுப்பா....

விழுந்து கும்புட்டுக்குங்க.

சபாஷ்!!!!நாட்டியம் ஆரம்பிக்கட்டும்.

மசமசன்னு நிக்காம சீக்கிரம் ஆடறவங்க ஆடுங்க. மணி ரெண்டாகப் போகுது.

நாளைக்கு வேற இடம் பார்க்கலாம்.

Monday, April 28, 2008

இது(வும்) நடைபாதைக் கடைகள்தான்......

நம்ம வகுப்புலே ஸ்டடி டூர் போறோம். தாயில்லாமல் நானில்லை...... அதனாலே முதலில் தாய்லாந்து.


தெருவோரக் கடைகளை எப்படி படு நீட்டாச் சுத்தமா வச்சிருக்காங்க பாருங்களேன். வாங்க....ஒரு கை பார்க்கலாம்

ஒங்கொப்புராணைச் சத்தியமா நான் காவல்காரன்.....


பதிவர் ட்ரெய்னீ தேறிட்டாருன்றதைச் சொல்றதுக்காக இந்த வாரம் புகைப்பட ஸ்பெஷல்ஸ் மட்டும் போட்டுக்கவா?





மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.........

பச்சை மாங்காத் துண்டுகளில் கொஞ்சமா உப்பும் மொளகாப்பொடியும் தூவித் தின்னா...... ஹைய்யோ ஹைய்யோ.....

முக்கனியில் ஒண்ணு குறையுதேன்னு பார்த்தா..... அட! பலாச்சுளை!!!

எனக்கு இள 'நீர்' போதும். உங்களுக்கு? தண்ணீயா இல்லை இளநீயா?


கொக்கே பறபற கோழி பறபற வாத்தே பறபறவா?

எங்க கதியைப் பார்த்துமா இந்தக் கேள்வி?


ஹூம் ..........இனி எங்கே பறக்கறது? (-:
அசைவப் பிரியர்களே, இது உங்களுக்காக


தாகம் தணிக்க ........ கலர்ஸ் & கலர்ஸ்


எனக்கு இதெல்லாம் ஆகாது. என் சாய்ஸ் சூப்பர் மார்கெட்தான். நோ ப்ராப்ளம்:-) நுழைஞ்சுரலாம்.

தலைவாழை இலை போட்டு நூடுல்ஸ் பரிமாறவா?



லேன் ட்ராஃபிக்ன்னா லேன்லேயே போவாங்க. இல்லே?


வடுவூர் குமார், பாலத்தை எல்லாம் நல்லாக் கவனிங்க. அப்புறம் கேள்வி கேக்கும்போது முழிக்கக்கூடாது...ஆமாம்.

Friday, April 25, 2008

பாப்பி தினமும், ஆன்ஸாக் பிஸ்கெட்டும்

இங்கத்துக் கொடிநாள்தாங்க இந்த ஆன்ஸாக் டே என்றது. இந்த 'ஆ' ஆஸ்தராலியாவையும் 'ன்ஸா' என்பது நியூஸிலாந்தையும் குறிக்கும்.
அடுத்து வரும் a ஆர்மி யையும் c என்றது corps.
A + NZ +AC = ANZAC. சரிதானேங்க.



நம்மூர்லே கொடிநாளுக்கு உண்டியல் குலுக்கிக், காசு போட்டவுடன் குட்டியா தேசியக்கொடி தருவாங்க இல்லே. அதே போல இங்கே கொடிக்குப் பதிலா சிகப்பு நிறமுள்ள பாப்பிப் பூ.
இந்தப் பாப்பிப் பூ என்றது கசகசாச் செடியின் பூதாங்க.



இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பியவர்கள் சங்கம்( Royal New Zealand Returned and Services' Association, RSA)
கொடிதினத்துக்கு இந்தப் பாப்பிப்பூவைக் கொடுத்து உண்டியல் குலுக்குவாங்க. இதில் கிடைக்கும் நிதியை இராணுவவீரர்களின் குடும்ப நலனுக்குப் பயன்படுத்தறாங்க.



ஏன் இந்த பாப்பிப் பூவைத் தேர்ந்தெடுத்தாங்க?



யுத்தம் நடந்த இடத்தில் மனுசங்க, கட்டிடம்,வீடுகள்னு எல்லாம் அழிஞ்சுத் தரைமட்டம் ஆன வெற்றிடத்தில், பருவகாலம் மாறியவுடன் முதல்முதலா முளைச்சது இந்தச் செடிகள்தானாம். 'வாழ்க்கை இன்னும்முடிஞ்சு போகலை. மறுபடியும் வாழ்க்கை இருக்கு' என்ற நம்பிக்கையைக் கொடுத்துச்சாம் இது. 1921 நவம்பர் 11 தான் முதல் பாப்பி தினம் பிரிட்டனில் அனுசரிச்சாங்க.
இந்த ஆன்ஸாக் தினம் என்பது, முதல் உலகமகா யுத்தத்திற்கு இங்கே நியூஸி & ஆஸ்தராலியாவில் இருந்து புறப்பட்டுப்போன படைவீரர்கள் யுத்தம் நடந்த கல்லிப்போலி என்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்த தினம்தான் இந்த ஏப்ரல் 25 என்றது. அது நடந்தது 1915.



இந்தப் போர் ஆரம்பிச்சது ஜூலை மாசம் 28, 1914. முடிஞ்சது நவம்பர் 11, 1918.



இதுக்கும் இந்த பிஸ்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?



இதை அந்தக் காலத்துலே 'படைவீரர்கள் பிஸ்கெட்ஸ்'ன்னு சொல்லுவாங்களாம். பார்க்கக் கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும்,
நாள்பட வச்சுருந்து தின்னலாம். சட்ன்னுக் கெட்டுப்போயிறாது. போர் நடக்கும் இடத்துக்கு இங்கே இருந்து உணவுப்பொருட்கள் அனுப்பும்போது இங்கத்துப் பெண்கள் இதைச்செய்து அனுப்புனாங்களாம். இப்படி இதுக்கு போரோடு ஒரு சம்பந்தம் வந்திருக்கு.



இந்த பிஸ்கெட் நாங்கதான் கண்டுபிடிச்சுச் செஞ்சு கொடுத்தோமுன்னு நியூஸியும் ஆஸ்தராலியாவும் சொல்லிக்கிட்டு இருக்கு. அதனாலேதான் ரெண்டு பெயரையும் சேர்த்தே இதுக்கு வச்சுட்டாங்க.



கிறிஸ்மஸ் கொண்டாடும்போது கிறிஸ்மஸ் கேக் & புட்டிங் எப்படி விசேஷமோ அப்படி கொடிநாள் வரும்போது இந்த பிஸ்கெட் இல்லாமக் கொண்டாட முடியாதுன்ற நிலையில் இருக்கோம் நாங்க:-))))




இப்பெல்லாம் பிஸ்கெட் கம்பெனிகள் இதைத் தயாரிச்சு வித்தாலும், இந்தப் பேரைப் பயன்படுத்த அவுங்க RSA கிட்டே இருந்து அனுமதி வாங்கிக்கணும்.
நல்ல சத்து நிறைஞ்சது இது. நாலு பிஸ்கெட்டை உள்ளே தள்ளிட்டு ஒரு கப் சாயா அடிச்சீங்கன்னா வயுறு திம்முன்னு இருக்கும். மூணு மணி நேரம் பசி தாங்கும். நான் கேரண்டி:-))))



ஏப்ரல் 25 க்கு முன்னே வரும் வார இறுதியில் இந்தப் பாப்பிபூ விற்பனைக்கு வரும். செயற்கைப் பூதான். சிகப்பு நிற ஃபெல்ட் லே செஞ்சது. இதுலே ஒரு சின்ன வெள்ளைப் பட்டை இணைச்சு அதுலே முடியாட்சியின் சின்னமான ராயல் க்ரீடம்( நாங்க இன்னும் மாட்சிமைதாங்கிய மகாராணியின் ஆளுகைக்குள்தான் இருக்கோம்)படமும் NZ Returned Services Association என்ற எழுத்துக்களும் அச்சடிச்சு இருக்கும். இதுலே ஒரு குண்டூசியை இணைச்சு வச்சுருப்பாங்க. உண்டியலில் காசு போட்டுட்டு இதை எடுத்துச் சட்டையில் குத்திக்க வேண்டியதுதான். பழைய ராணுவ வீரர்கள் இதை வச்சு விற்பதைப் பெருமையுடன் செய்யறாங்க. அங்கங்கே ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்களில் ஒரு மேசை நாற்காலி போட்டு கம்பீரமா மினுங்கும் மெடல்களுடன் இவுங்க உட்கார்ந்து இருப்பதைப் பார்த்ததும் நமக்கே ராணுவத்தினரின் தியாகங்கள் ( அது எந்த நாடா இருந்தாலும் சரி) மனசுலே வந்து போகும்தானே?



இன்னிக்கு அரசாங்க விடுமுறை. அதிகாலை சூரியன் உதிக்குமுன் (dawn) வார் மெமோரியலில் மலர்வளையம் வச்சு பிரார்த்தனை செய்வாங்க. தொடர்ந்து சர்ச்களிலும் பிரார்த்தனை நடக்கும். நானும் இந்த 21 வருசமா ஒரு முறையாவது நேரில் போய்க் கலந்துக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வேளை வரமாட்டேங்குதே(-: குளிர்காலம் ஆரம்பமாச்சு. லீவு வேற. எழுந்திரிக்கச் சோம்பல்தான். தொலைக்காட்சியில் தாத்தாக்கள், பாட்டிகள்னு ராணுவம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தேய்ச்சு மினுக்கிய யூனிஃபாரமும் மின்னித் திளங்கும் மெடலுமாய் அங்கே இருப்பதைக் காமிக்கும்போது மனசுக்கு குற்ற உணர்வு வருவதைத் தடுக்க முடியலை(-:
நாங்க (நியூஸி & ஆஸி) இதை ஏப்ரல் 25க்குக் கொண்டாடுனாலும், இந்தப் போரில் கலந்துக்கிட்ட மற்ற நாடுகள் நவம்பர் 11 ( போர் முடிந்த நாள்) கொண்டாடுறாங்க.


எல்லாருக்கும் ஒரு வழின்னா எங்களுக்கு எப்பவுமே வேற வழிதான்:-)

கடைகண்ணிகள் எல்லாம் பகல் 1 மணிக்குமேல்தான் திறக்கணும். அவுங்களுக்கு அரைநாள் லீவு. இது தெரியாம (ன்னு நினைக்கிறேன்) சில சீனக்கடைகள் வழக்கம்போல் காலையிலேயே திறந்து வச்சுருந்தாங்க(-:



சரி இந்த பிஸ்கெட் செய்யும் முறை சொல்லித்தரவா?
ஒருமுறை செஞ்சுதான் பாருங்களேன்.
இதுலே கூட ஆஸி, நியூஸின்னு ரெண்டு வகை இருக்கு. நாம் இப்பச் செய்யப்போறது நியூஸி வகைதான்:-))))

1 கப் ஓட்ஸ்
1 கப் மைதா மாவு
அரைக்கப் சக்கரை
முக்கால் கப் (டெஸிகேட்டட்) தேங்காய்ப்பூ
125 கிராம் வெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் கோல்டன் சிரப் ( வெல்லப்பாகு டின்லே கிடைக்கும்)
அரைத்தேக்கரண்டி (ஆப்ப) சோடா உப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் சுடுதண்ணி.

அடுப்பில் இருக்கும் ஒவன்(oven) பகுதியை 160 டிகிரி (செல்சியஸ்)வச்சு சூடாக விடுங்க.
வெண்ணெய் & சிரப் ரெண்டையும் ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசா சூடாக்கி வச்சுக்குங்க. (ஆமாம் இதுக்கு என்ன தனி மரியாதை? பேசாம ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பத்திரத்தில் வச்சு, சூடாகிக்கிட்டு இருக்கும் அதே அவன்லே கொஞ்ச நேரம் வச்சாப் போதாதா?)
ஆப்ப சோடாவை அந்த ஒரு டேபிள் ஸ்பூன் சுடுதண்ணியில் கரைச்சுவச்சுக்கிட்டு, வெண்ணெய் உருகுனதும் அதுலே கலந்துருங்க. மீதி இருக்கும் உலர்ந்த பொருட்களை (ஓட்ஸ் மாவு இத்தியாதிகள்) ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கிவச்ச வெண்ணெய், சிரப் தண்ணியை ஊத்தி நல்லாக் கலக்குங்க.
ஒரு ஸ்பூன் கலவையை எடுத்துக் கையில் உருட்டி மசால்வடைக்கு தட்டுறதுபோலத் தட்டி ஒரு பிஸ்கெட் ட்ரே யில் ஒவ்வொண்ணுக்கும் இடம்விட்டுத் தள்ளிதள்ளி வையுங்க.
அவன் இதுக்குள்ளெ சூடாகி இருக்கும். 8 முதல் 10 நிமிஷம் வச்சு எடுத்தால் போதும். இந்தக் கணக்குலே 28 பிஸ்கெட்ஸ் வரணும்.

கொஞ்சம் நல்லா ஆறவிட்டுக் காற்றுப்போகாத டப்பாவுலே போட்டு வச்சுக்கலாம்..... நீங்க தின்னபிறகு மிச்சம் இருந்தால்:-))))

ஆஸிகள் செய்முறையில் என்ன வித்தியாசம்? இருந்தே ஆகணும் இல்லை.
செய்முறை எல்லாம் இதேதான். ஓவன்சூடு மட்டும் 180 டிகிரி.

மற்ற சாமான்கள்:
2 கப் ஓட்ஸ்
1 கப் மைதா மாவு
1 கப் சக்கரை
1 கப் (டெஸிகேட்டட்) தேங்காய்ப்பூ
1/2 (அரைக்) கப் வெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் கோல்டன் சிரப் ( வெல்லப்பாகு டின்லே கிடைக்கும்)
1 தேக்கரண்டி (ஆப்ப) சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் சுடுதண்ணி.

எந்த நாடு வேணுமோ அதையே செஞ்சுக்குங்க. நியூஸி செய்முறை செஞ்சா ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு 10 க்ரேஸ் மார்க் போடுவேன்:-))))

இது அசப்புலே பார்க்க மசால்வடை(கோமளவிலாஸ், சிங்கை) மாதிரிதான் இருக்கு.

இந்தப் படத்தைப் பாருங்க. எது பிஸ்கெட் எது வடைன்னு கண்டுபிடிச்சுருங்க பார்க்கலாம்:-))))